கவிதைமணி

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு: கவிஞர் டி.கே. ஹரிஹரன்

கவிதைமணி

கருகும் பயிர்கள்
உருகும் உயிர்கள்
உடனே வேண்டும் ஜல்லிக்கட்டு

 பொய்த்தது வானம்
வெடித்துப் பிளக்கும் பூமி
வேண்டும் வீர விளையாட்டு

தற்கொலையில் விவசாயி
குற்றுயிராய்க் குடும்பம்
 காப்பாற்றவேண்டும் பண்பாடு

கைவிரிக்கும் காவிரி
மனமில்லா மானுடம்
மகிழவேண்டும் ஏறுதழுவி.

உயிர்க்கொலைகள் நிகழும்
சூதாடி மகிழும்
நிறுத்தப்போமோ கிரிக்கெட்டை

தடுக்கவேண்டிய கொலைகள்
ஏராளம் இருக்க
நீதிமன்றம் தடுக்கும் காளைவதையை

மல்லுக்கட்டாமல் நடக்கட்டும்
ஜல்லிக்கட்டு
கொண்டாடுவோம் பொங்கல்
வெறும்பானையோடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

SCROLL FOR NEXT