கவிதைமணி

சட்டம்:  அழகூர். அருண். ஞானசேகரன்

கவிதைமணி
சட்டத்தின்   முன்னம்   அனைவரும்   சமமென                   சாசனம்   கூறிடல்   உண்மையன,          சாதிக்கும்   மதத்திற்கும்   இடத்தினை   ஒதுக்கிடல்                  சழக்கென்றும்   உணரா   திருப்பதுமேன் ?திட்டமிட்டு   இதனைச்   செய்வதும்   கொடியத்                  திருட்டே   என்றிட்டும்   ஆகாதோ ;         திறமைக்கு   முதலிடம்   இல்லையென்   றாவதும்                  தீர்க்கமே   இல்லாச்   செயலல்லவோ ?மட்டமான   இந்தச்   செயலிதால்   நாடிதன்                  மாட்சிக்குக்   கேடன்றோ   நேர்ந்திடுமாம் ;         மகிமை   தனைக்கொண்ட   அறிஞரை   நாடிதும்                  மதியாச்   செயலென்றே   ஆகாதோ ?எட்டாக்   கனியென்றே   ஆகிடும்   பதவிகள்                  இதனால்   சிறந்தநல்   அறிஞருக்கும்,         இதைப்போல்    கொடுமைகள்   வேறேதும்   உண்டோ                  இடவொதுக்   கீடின்றும்    தேவையதோ ?சட்டங்கள்   நீதிகள்   வல்லவர்க்கே --- இது             சாமானியர்க்   கென்றென்றும்   கிட்டாதாம் !எட்டாக்   கனியிது   இன்னாட்டில்  --- இன்று             ஏழ்மை   தனைக்கொண்ட   மக்களுக்கு !முட்டியும்   மோதியும்   கிடைக்காதாம் --- தன்னால்             முறையாய்க்   கிடைத்ததாய்   கேட்டதுண்டோ ?தட்டுங்கள்   திறக்கப்   படுமென்பார் --- தட்டியும்             தாழ்ந்தவர்க்   கில்லையாம்   இன்றுவரை !சட்டத்தை   மதிப்பது   தமிழர்நம்   கடமை,            சழக்கினை   எதிர்ப்பது   என்றும்நம்   உரிமை!திட்டமிட்டு   நம்மின்   உரிமையைப்   பறிப்பது            தேவையற்ற  ஒன்று ;  எதிர்ப்பதே   முறைமை !தட்டிப்   பிறர்தம்மின்   உரிமையைப்   பறிப்பது            தரங்கெட்டச்   செயலிது ,  பொறுப்பதும்   சரியோ ?கிட்டுமோ   நீதியும்   தன்னாலே   எவர்க்கும்,            கேளாமல்   இருந்திடக்   கிடைக்குமோ   உணவும்?எண்ணற்ற   ஓட்டைகள்   சட்டத்திலே --- இன்றும்            இருப்பதே   உண்மை   என்றுணர்க!உண்மையாய்   அவைகளை   அடைப்பதுவே --- கொண்ட            உன்னதக்   கடமையாம்   அரசிர்க்கு !மண்ணில்   நியதிகள்   நிலைபெறவும் --- அதை            மக்கள்   எளிதினில்   பெற்றிடவும்,கண்களைக்   கட்டிய   அறதேவதை --- தீர்ப்பை            காலம்   தாழ்த்தாமல்   வழங்கட்டுமே!எல்லோர்க்கும்   பொதுவான   நீதியதும்   இன்னாட்டில்            எளிதாகக்   கிடைப்பதில்லை  என்பதே  உண்மை!வல்லவர்க்கே  சாத்தியமாம்,   வணங்கிட்டும்   பணிந்திடுமாம்;            வாட்டிடுமாம்   எளியவரை,   வாழ்நாளில்   கிட்டாதாம் !இல்லார்க்கு   என்றுமது   எட்டாதக்   கனியேதான்,            இன்னதுவே   நெறியென்றால்  இதிலேது   புனிதமதும்?பொல்லார்க்கும்   இல்லார்க்கும்   இனியேனும்   எளிதாக             பொதுவான   நீதிகிட்டும்   பொற்காலம்   பிறக்கட்டும் !சட்டமது   அனைவரையும்   சமமாகப்   பார்க்கட்டும்,            சழக்கருக்கு   என்றுமது   துணைபோகா   திருக்கட்டும் !கிட்டுவதில்   தாமதமும்   கிடைக்காததும்   ஒன்றேதான்,            கேவலமும்   இதைப்போலே   நாட்டினிலே   வேறில்லை!கெட்டவரை  தண்டிக்கத்   தயங்குகிறச்   சட்டமதும்            கேள்விக்   குறியாச்சு;   அறதேவன்   உறங்குவதேன் ?முட்டிமோதி   இன்றுவரை   மல்லுகட்டும்   பல்லாயிரம்            முதியவர்கள்  இன்றுண்டு,  இன்னாட்டில்   உண்மையிது!                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

SCROLL FOR NEXT