கவிதைமணி

சட்டம்:  லூர்து எஸ் ராஜ்

கவிதைமணி

சட்டத்தை வகுத்தவர் சரியாய்த்தான் செய்தார் –அதில்
சந்து பொந்தைக் கண்டவனோ   தப்பித்துக் கொண்டான்.
சட்டத்தை வளைத்துக் கொண்டான் அரசியல்வாதி – அதை
சற்றும் அறியா பாமரனோ மாட்டிக்கொண்டான்.

எல்லாரும் சமமென்ற போதிலும் இந்நாட்டில்  - வாழ்
ஏழைக்கு தனிச்சட்டப் பாதுகாப்பு  வேண்டும்
பல்லாண்டு சென்றாலும்  மாற்றமில்லை – கொடும்
பணத்தா ட்சி மாறாமல்  அவர்க்கு   வாழ்வில்லை.

ஓட்டையில்லா சட்டங்கள் வாய்ப்பதில்லை   –  நல்லார்    
ஒழுங்கமைதி உறுதியைக் குலைப்பதில்லை.
சட்டத்தை மதித்திட    மறக்க  வேண்டாம் –  மனச்
சாட்சி எனும் சட்டத்தை    ஏய்க்க  வேண்டாம் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமேசுவரத்தில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுக, அமமுகவினா் மரியாதை

கூட்டணி விவகாரத்தில் கட்சித் தலைமை முடிவுக்கு கட்டுப்படுவோம்: சுதா எம்.பி.

அரசுப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

SCROLL FOR NEXT