கவிதைமணி

வீரமங்கை: -ரெத்தின.ஆத்மநாதன்

கவிதைமணி

நீயுங்கூட   வீரமங்கைதான்!
-மன்னார்குடி  மாஃபியாக் கும்பலின்
வஞ்சக வலையில் வீழாதிருந்திருந்தால்!

-அஞ்சுக்கும்  பத்துக்கும் அல்லாடுபவர்களின்
அடி வயிற்றில் அடிக்காதிருந்திருந்தால்!

-ஐதராபாத்திலிருந்து கன்னியாகுமரி வரை
அத்தனை சொத்துக்களையும் வாங்காதிருந்திருந்தால்!

-ஆணவ அரசியல் நடத்தி அதுதான் 
அம்மா ஸ்டைலென்று காட்டாதிருந்திருந்தால்!

-முகஸ்துதிக்கு முக்கியத்துவம் கொடுத்து
தகுதியற்றவர்களுக்குப் பதவிகள் வழங்காதிருந்திருந்தால்!

-யாருக்கோ  திருமணம்  செய்யப்போய்
நகைக்கடைப் பொம்மையாய் நடமாடாதிருந்திருந்தால்!

-வாக்காளர்களை விலைக்கு வாங்கும்
வன்ம புத்தியைத் தொலைத்திருந்தால்!

-தாது மணலையும் ஆற்று மணலையும்
விலை பேசி விற்காதிருந்திருந்தால்!

-மது அரக்கனை டாம்பீகமாக
டாஸ்மாக் கடைகளுக்கு விடாதிருந்திருந்தால்!

-புலியாய் வலம் வந்த நீ
பூனையாய்ச் சாவாது இருந்திருந்தால்!

-துரோகிகளை வளர்த்து விட்டதால் 
இறப்பும் உனக்குத் துரோகமாகிப் போனது!

-ஆனாலும் இருந்த வரை நீ இரும்புப் பெண்தான்!
இறந்தவர்களின் புகழ்பாடுவதே இம் மண்ணின் மரபு!

-அந்த வகையில் நீ வீரமங்கை தான்!
குற்றங்களை மறந்து உன் புகழ்பாடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலக்கியக் கொள்கைகள்

மோடியை வரவேற்ற இஸ்ரேல் பிரதமர்!

இன்டர் மிலனுக்கு அதிர்ச்சி..! முதல்முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய நார்வே கிளப்!

சூரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை: காரணம்?

வரப்பெற்றோம் (23-02-2026)

SCROLL FOR NEXT