கவிதைமணி

உன் குரல் கேட்டால் ! கவிஞர் இரா .இரவி !

கவிதைமணி
உன் குரல் கேட்டால் நான் திரும்பவும் உயிர்த்தெழுவேன் உயரம் தொடுவேன் !அலைபேசியில் ஒலி வரும்போதெல்லாம் அழைப்பது நீயோ என்று எடுப்பேன் !எடுக்கும் ஒவ்வொரு  முறையும் ஏமாற்றமேஎனக்கு மிஞ்சியது ஏக்கமே எஞ்சியது  !நான் உன்னை அழைத்துப்  பேசலாமென்றால் நின் எண் என் வசம் இல்லை  ஆனால் !உன்னிடம் உண்டு எனது எண்நீ நினைத்தால் ஒரே ஒரு முறை !மறக்க நினைத்தாலும் முடிவதில்லை மனதில் நினைவுகள் வந்து மோதுகின்றன !மூச்சு உள்ளவரை உன் நினைவு மூளையின் ஒரு ஓரத்தில் இருக்கும் !பசுமையான நினைவுகள் எனக்கு பகலிலும் வந்து போகின்றன !கல் நெஞ்சம்  கேள்விப் பட்டதுண்டு கள்ளி உனக்கோ இரும்பு நெஞ்சம் !இரும்பு கூட தீயிலிட்டால் வளையும்என்னவளே நீ எப்போது வளைவாய் !   என்றாவது நீ அலைபேசியில் அழைப்பாய்என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு  !இரக்கம் கொண்டு என்னை அழைக்கலாம்ஒரே ஒரு முறை அழைத்திடுவாய் !ஒரே ஒரு முறை உன் குரல் கேட்டால் உள்ளமும் உடலும் பூரிப்பு அடையும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியக் கடல்பகுதியில் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது!

2 வது டி20: டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது இந்தியா!

கொம்புசீவி டிரைலர்!

ரஜினியின் ஊட்டி சென்டிமென்ட்

இயக்குநர் மகேந்திரனின் 'ஜானி'  தமிழில் ஒரு மாற்று சினிமா - ஏன்?

SCROLL FOR NEXT