கவிதைமணி

புதிய ஓட்டம்:  கவிஞர் இரா .இரவி 

கவிதைமணி
காவிரியில் வரும் தண்ணீர் இன்று புதிய ஓட்டம் கர்நாடகத்தில் நிரம்பியதால் தமிழகத்தில் பாய்ந்தது !சீறிப்பாய்ந்து வரும் நதியை ஓட விடுங்கள் சிறைப்பிடித்து வைக்கும் சின்னப்புத்தியை விடுங்கள் !இரண்டு  நாடுகள் கூட அமைதியாகப்  பகிர்கின்றன !ஒரே நாட்டில் பகிர்வதில் சண்டை வழக்கு ஏனோ ?இயற்கையைச்  சொந்தம் கொண்டாட உரிமையில்லை இயற்கையைச் சிதைக்காமல்  இயல்பாக ஓட விடுங்கள் !பகிர்ந்து உண்டு  வாழ வேண்டுமென்று  அன்றே பகர்ந்தார்  உலகப்பொது மறை தந்த திருவள்ளுவர் !மூன்று போகம் விளைந்திட்ட தஞ்சையில் இன்று ஒரு போகத்திற்கு தண்ணீர்  இன்றித் தவிக்கின்றனர் !யானைக்   கட்டிப் போரடித்த தமிழக மண்ணில் யாசித்து நிற்கின்றோம்  தண்ணீர் வேண்டி !உச்சநீதி மன்றம் உரைத்தால் வேறு வழி  இல்லை உடனே நீட் தேர்வு அமுல் என்று சொல்வோர் !உச்சநீதி மன்றம் தீர்ப்பில் காவிரி மேலாண்மை உடனே அமைக்கச் சொன்னால் கேட்காதது ஏனோ ?உழவர்களின் துன்பத்தை சற்றே உணர்ந்து பாருங்கள் உயிரை மாய்த்து வருவது உங்களுக்குத் தெரியவில்லையா ?தமிழகத்திற்கு நியாயமாகச் சேர வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு ஓடிவர உடன் அனுமதியுங்கள் !நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும் நடக்கட்டும் புதிய ஓட்டம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொறுப்புகள் அதிகரிக்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

குளத்திலிருந்து ஆண் சடலம் மீட்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சாலை மறியல் முயற்சி: 190 போ் கைது

SCROLL FOR NEXT