நீ கண் சிமிட்டினால்: ஜெயா வெங்கட்
கதிரவனே! நீ
கண் சிமிட்டினால் ......
உயிர்த்து எழுகின்றன
உயிர்கள்!
வெண்ணிலவே! நீ
கண் சிமிட்டினால்......
கவி பாடுகின்றனர்
காதலர்!
கார்மேகமே! நீ
கண் சிமிட்டினால்......
மண்ணில் விழுகின்றன
மழைத்துளிகள்!
மலையே! நீ
கண் சிமிட்டினால்.....
மயங்கிக் கொட்டுகின்றன
மலையருவிகள்!
நதியே! நீ
கண் சிமிட்டினால்.....
நனைந்து மகிழ்கிறது
நானிலம்!
இயற்கை அன்னையே! நீ
கண் சிமிட்டினால் ......
இன்புற்று வாழ்கிறது
இவ்வையகம்!