தனிமையோடு பேசுங்கள்தங்களோடு பேசுங்கள்!உண்மையாகப் பேசுங்கள்உங்களோடு பேசுங்கள்!தனிமையோடு பேசுங்கள்தன்னை உணர பேசுங்கள்இனிமையாக பேசுங்கள்இல்லம் சிறக்கப் பேசுங்கள் !கண்டம் விட்டு கண்டம் தாண்டிகரன்சி சேர்க்கும் மனிதனே!நீ! தனிமையிலே விட்டுச்சென்றபெற்றோடு பேசுங்கள் !தனித்து வாழும் தங்கத்தாலேஎந்த பயனும் இல்லை!செம்போடு சேர்ந்த தங்கம்தான்சிலையாகவும் மாறும்!தாய் தந்தையோடு பேசுங்கள்தனிமை போக்க பேசுங்கள்!குழந்தையோடு பேசுங்கள்கூடி வாழ பேசுங்கள் !தனிமையிலே பேசுங்கள்தனிமையோடு பேசுங்கள்தத்துவத்தை பேசுங்கள்தரணி புகழ பேசுங்கள்!