முகப்பு
கவிதைமணி

தனிமையோடு பேசுங்கள்: ஷஹி சாதிக்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:24 PM
பகிர்:

என்
உள்ளமோர் வானமாகிடாதோ...?
லட்ச நக்ஷத்திரம் ஏந்தி
உனக்களிக்க!

சில துளி
உப்பெனக் கசிந்தது.
சிக்குண்டு
அலைகளுக்குள் 
கடலெனக் கிடந்தேன்...
நுரைத்து நுரைத்து
கனவும் நினைவும்
தனிமையோடு பேசுங்கள்
என்றது.

மீன்களாய் ஓடியவள்
நீ,
மீதியில்லாமல் குடித்தாய்
மொழியை!

நான் வானத்தை
ஏங்கியவன்.
ஏன் நாணத்தில்
மூழ்கிவிட்டேன்?

இனி 
இருதயம் மொய்க்க 
துனிவில்லாப் பூக்கள்
இருளிலும் புயலிலும்
ஏது செய்யும்?

நீந்திக் கடக்கையில்
என் மன தாபங்கள்
நீரினால் அமிழ்த்திட
வின்மீன்கள் இறக்குமோ?

நான் 
தனிமையோடு பேசவா?
ஏன் 
இனிமையோடு நிலவைக் கானவில்லை?

கடலாகி விழுங்கிவிட்டேன்
நானோ?
இன்று அநாதையாகிவிட்ட அஸ்தமணம்
தானோ...!

குரலில்லாமல் மெளனம் 
கசிந்தது....
தனிமையோடு மொழியில்லாத
நிசிகள்.
அளவலாவல் ,
என் இரைச்சலில் 
அதிர்ந்து போனது
தனிமை!

நான் 
காற்றிடம் 
போ என்றேன்.
கானாமல் போய்விட்டன
அலைகளும்...
தேடினேன்!

என்
மனதமுக்கம் 
உன் ஓட்டத்தில்
மறைந்திடாதோ?
பெயராக்கடல் நான்
என் செய்வேன்...

தனிமையோடு 
எவ்வளவு தான் பேச?
இனிமையிழந்து 
துவர்ந்து போனதானேன்!

நான் 
விழுங்கிக்கொண்ட
சூரிய சந்திரன் என்னை
விழுங்க வற்றிப் போனேன்!

புள்ளியாகிவிட்டேன்!
நீ வாழும் நான்...
கொள்ளி வைத்தது என் கனவோ...!

புள்ளி!
உன் சுவாசம்?
புள்ளியை நீங்குவாயோ?
என்னிடம் 
துள்ளியோட நீ மறப்பாயோ?

சரி,
நீங்கு!
நான் சுடரில் குதிக்கிறேன்...
கடைசித் துளி
உன் சுவாசத்திலேனும் 
கசிந்து வாழ....!

கடைசித் துளி,
சுவாசமாகிறேன்!
தனிமையோடு பேசிக்கொண்டு...

முழு கட்டுரையைப் படிக்க →