முகப்பு
கவிதைமணி

தனிமையோடு பேசுங்கள்: எஸ். கருணானந்தராஜா ​

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:24 PM
பகிர்:
தனிமையிலே உன்னோடு தர்க்கித்துப்பார் –உந்தன்தவறுகள் யாவினையும் தனிமை உனக்குணர்த்தும்தன்னையளந்தவனே மண்ணையளந்தவனாம்என்னும் பழமொழியோ என்றும் பொருந்துவதாம்உன்னையே நீயறிவாயென்றெதற்குச் சொன்னார்கள்?உன்னிடம்தான் கேள்விக்கு உரிய பதிலுண்டென்றே.தட்டிப்பார் உள்ளத்தை தவறாது அது திறக்கும்கேளங்கே கேள்விகளை கேட்டதற்கு  விடைகிடைக்கும்தேடு பதில்தன்னை தேவன் அறிவிப்பான்என்றுரைத்த யேசு  எமக்கெல்லாம்  அறிவூட்டநன்றைத்தான் சொன்னார் நாசமுறச் சொல்ல வில்லைகையிலே நெய்யை வைத்து வெண்ணெய்க்கலையாதேபொய்யில்லை உன்னிடம் தான் பொற்குவியல் சேர்ந்துளதுஉள்ளொளியைக்காண உலகமெங்கும் சுற்றாதேகள்ளமிலா மனது காட்டுமந்தப் பேரொளியை.சித்தம் கடந்து சிவலோகம் காண்பதற்குவித்தையொன்றும் தேவையில்லைவீணான துன்பமில்லைஅத்தனையுமுந்தன் அகத்தினிலே தானுண்டு நம்முடலுள், நம்மனதுள், நம்மிதய ஆழத்தில்கட்டை விரலளவு கடவுளுண்டு என்பார்கள்கண்டு பிடி நாவுக் கரசனுரைத்தபடி‘தேடித் தேடொணாத் தேவனையுன்னுள்ளேதேடிக் கண்டுபிடி‘  தீரா வினையகற்ற.பாவமறுந்த பரலோக ராஜ்ஜியத்தில்ஜீவனை நித்தியமாய்நிலைக்க வைக்க வேண்டுமென்றேஉன்னை இரட்சிக்க உன்னுடைய தேவன்உள்ளான் அவனை உனக்குள்ளே நீ தேடு. உன்னோடு நீ பேசு உரிய வழி கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.