தனிமையோடு பேசுங்கள்: மீனா தேவராஜன்
தாமரையிலை மீது தண்ணீர் ஒட்டாது
நம் மேனியின் மீதும் தண்ணீர் ஒட்டாது
நம் அனைத்து பந்தங்களும் ஒட்டா
நம் அனைத்து சொந்தங்களும் ஒட்டா
முதியோரானபின் நாம் தனியோராவோம்
நாதியற்று நாமாய் அனாதி ஆயிடுவோம்
பெற்றபிள்ளை பேரன் பேர்த்தி யாரும்
உற்ற துணையாகார், தனிமையில் மனத்தோடு
பேசிபேசிப் பழகிடுங்கள், தனிமையே நமக்கு
வசியமாகும், தனிமையே ஆதாரவாகும்!