முகப்பு
கவிதைமணி

வெல்லும்சொல்: வேதஹரி

Updated On : 11 ஜூன், 2018 at 4:09 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 7:05 PM

வணக்கம்பாரதி!
வருக! வருக!!

ஒருசொல் வேண்டி
எண்ணத்தை துரியத்தில் குவித்து
உன் இனமே
தவம்கிடக்கிறது

உன் பாட்டையெல்லாம்
படித்தவர்கள்தான் - அதன்
பொருளை கரைத்து
தெளிந்தவர்கள்தாம்

Advertisement

இருந்தும்பயனில்லை!

வீரம் செறிந்த
வார்த்தைகள் வரைந்த
உன் பாடல்களில்
எதைதருவாய்?

நீயும்
எண்ணத்தை குவித்து
தேடவேண்டுமாயின் வேண்டாம்.
உன் பராசக்தியிடம் கேள்
விரைந்து செயல்படு - வெல்லும்
ஒருசொல் கொடு

காரணம்-நாங்கள்
விஞ்ஞான உலகில்
வாழ்கின்றோம்

காற்றினும்
வேகமாய் செயலாற்றி
ஒளியினும்
வேகமாய் பகிரவேண்டும்
முக புத்தகத்தில்
முந்த வேண்டும்
மிச்ச செயலிகள்
ஏங்கவேண்டும்

உன்னிடம்
எந்தசெயலிப்ரதானம்?

செயலி குறைபாடா?
தெரிந்த வரை நாடு
இல்லையேல்
வின்னுலகம் திரும்பி விடு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.