கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

கவிதைமணி
வழித்துவிட்ட  தலைமொட்டை   போல  நாட்டை            வறட்சியிலே   தள்ளிவிடும்  செயலை  விட்டேஅழித்ததுபோய்   காடுகளில்  மிச்சம்  தன்னை            அடுத்துவரும்  தலைமுறைக்காய்  மீட்ட  ளிப்போம் !குழிபோட்டு  குழிபோட்டுப்  பூமிக்   குள்ளே            குழாய்விட்டே  இருக்கின்ற  நீரெ  டுத்தேவிழிபிதுங்கிச்   சந்ததியர்   தாகத்  தாலே            விக்கியுயிர்  விட்டிடாமல்  மிச்சம்  வைப்போம் !அறிவியலின்  முன்னேற்றம்  என்று  சொல்லி            அதிவிரைவு  வாகனங்கள்  சாலை  ஓட்டிப்பொறிபறக்க   நச்சுபுகை  பரவ  விட்டுப்            பொலிவான   சுற்றுபுறம்   காற்றை   யெல்லாம்வெறியோடு   மாசுசெய்தே   எச்சத்  தார்கள்            வெவ்வேறு  நோய்களிலே  துடிது  டிக்கத்தறிகெட்டுப்  போகாமல்   தூய்மை   காத்துத்            தந்திடுவோம்  இயற்கையினைச்  செம்மை  யாக !மலைகளினை  தகர்த்திட்டோம்  குளங்கள்  ஏரி            மனைகளாக்கி  விற்றுவிட்டோம்  ஆற  ழித்துவிலைபேசி  மணலள்ளி   மலடு  செய்தோம்            விளைநிலத்தில்  சாலைபோட்டு  வாழ்வி  ழந்தோம் !தலைமுறையாய்க்   காத்துவந்த   வளத்தை  யெல்லாம்            தாரைவார்த்துச்  சந்ததியைத்  தவிக்க  விட்டோம்வலைதுடிக்கும்  மீன்கள்போல்   வருங்கா  லந்தாம்            வாய்த்திடாமல்  இயற்கையினை   மீட்போம்  வாரீர் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT