கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: பி.பிரசாத்

கவிதைமணி
வாழையடி வாழையென நமக்கெல்லாம் வந்திட்ட‌   வளங்களைநாம் சீராகக் காக்காமல் சிதைத்திங்குபாழாகச் செய்ததொரு தலைமுறையாய் ஆனோமே !   பின்திரும்பி பார்த்துணரும் நன்நேரம் இதுதானே !மண்பானை, பீங்கானை மறந்தேதான் ப்ளாஸ்டிக்கை   'மாடர்னாய்' பார்த்தோமே ! மாசாச்சு நமைசுற்றி !முன்னேறும் வழியென்று "கேட்ஜெட்"டின் பின்சென்று   அதில்மூழ்கி மறந்தோமே உறவோர்கள் நிலைபற்றி !  "நிலமெங்கள் உரிமை"யென ஆற்றுவழி பாதையிலும்   புதுவீடு கட்டிகுடி புகுந்ததனால் நீர்வழிகள்...வளமெல்லாம் சேர்க்காமல் வறண்டிங்கு போனதுவே !   வருந்தியேதான் என்செய்ய திருந்தஒரு வாய்ப்பிதுவே !வந்திடும்நம் சந்ததியர் முன்னோர்கள் தந்தவற்றை   வாழ்வினிலே காணாமல் போகின்ற நிலைவருதே !முந்தியேதான் சேர்ந்திடுவீர்! வருகின்ற தலைமுறைக்கு   மிச்சமதை மீட்டிடுவோம்! நல்லவழி காட்டிடுவோம் !      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT