ஒரு முறையேனும்: பாலா கார்த்திகேயன்
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
தெய்வமே
தேடித் தேடி அலைகிறோம்
தேடிக் கிடைக்காமல் தவிக்கிறோம்
உன் அருள் தேவையே
உன் கருணைப் பார்வை வேண்டுமே
தமிழனின் உரிமைகள்
தமிழனின் போராட்டங்கள்
தீர்வு கிடைக்குமா....
காய்ந்து போன உள்ளத்தில்
மாய்ந்து போன மனிதனிடத்தில்
சோர்ந்து போன நெஞ்சத்தில்
அயர்ந்து போன எம் குலத்தில்
Advertisement
அமைதி பிறக்க
அற்புதம் நடக்க
ஒரு முறையேனும்
தெய்வமே உன் கண் பார்வை படாதா....