கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை:  கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

கவிதைமணி
அரக்கரென்றே” அவதரித்தார் ஆண்கள்  இங்கே   அதிசயமாய் ஒன்றிரண்டு என்றே உண்டுஇரக்கமென்ற ஈரமெல்லாம் எடையில் கேட்க   எவர்மனதும் மனிதரென்றே இல்லை இங்கேஉரக்கவொரு வார்த்தைசொன்னால் “உதைப்பேன் என்று”   உயிர்நிலையைத் தாக்கிடவே ஓங்கும் கைகள்கருக்கலிலே இனிக்கப்பேசி கர்ப்பம் தந்து   கருவினிலே குழந்தைகளை “தொலைக்கக் கொல்வார்”தாயாகும் பேறுயென்றே “மகிழ்வில் பெண்மை”   தனித்தவள்நான் இல்லையென்று தாயாய் நிற்பாள்மாயமொன்று நிகழுதென்று மகிழ்வில் தன்னுள்   “மதிமகிழ்ந்து மாளிகைகள்” கட்டிக் கொள்வாள்நேயமுடன் பார்வைதந்து நித்தம் வாழ்ந்து   நேர்நின்ற யாவருக்கும் தருவாள் அன்பைஆயகலைகள் உணருகின்ற அரிதோர் வேளை   அவசரமாய் “கருவழிக்கத் துடிக்கும்” வேலைகருத்தினிலே பெண்மைதன்னை “மதிப்போர் இல்லை”   கணக்கினிலே அவர்பேச்சைக் கேட்பார் இல்லைஉறுத்தலின்றி கருவினிலே கொலைகள் உண்டு   உருவாகும் குழந்தைகளை “தொலைப்போர் உண்டு”உருவறியா வளர்நிலையில் அறிஞர் ஞானி   எத்துனைபேர் அழிந்தாரோ அறிவார் யாரோ“கருவினிலே தொலைத்துவிட்ட குழந்தை” எல்லாம்   கணக்கறியா கொலைபுரிந்த கொடுமை அன்றோ ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT