செல்பேசி சேவல் ஒலி அலாரண்
‘டமாரமாய்’எழுப்பும்!
ஆறு பேருக்கு ஏழுவித காபி
எத்தனையாவது விசில்?
சந்தேகத்துடனே ஆகும் சமையல்!
அவசரஅவசரமாய்
பள்ளிக்கு கிளம்பும் குழந்தைகளுடன்
அவசியமாய் நானும்…
இடையிடையே அவருக்கு
நேரத்தை நினைவுபடுத்தும் வேலை !
குழந்தைகளுக்கு மதிய உணவு!
மேஜையில் அவருக்கு காலை சிற்றுண்டி!
‘அவர்களுக்கு’ தனித்தனியே மருந்து மாத்திரைகளுடன் உணவு ! !
அவருடன்தான் பயணம்ஆனபோதும்
சாலையில் எழும் ஹாரன் ஒலி ஆயுளையேக் கொல்லும்.
அதுமட்டுமன்றி அலுவலகத்தில்
காரிய வணக்கம் ஆணவ வணக்கம் . . .
அத்தோடு அலுவலக அரட்டை!
மாலை வெய்யில் வியந்வை பேருந்தில்
நெரிசலில் நசுங்கும் நேரம் மாநகரின் மாநரகம் !
போக்குவரத்து இரைச்சல் கடந்து
இல்லம் அடைந்தால்
தொலைக்காட்சி தொடர் நேரத்தைத் துரத்தும் !
எல்லாவற்றையும் கடந்து யோசித்துப் பார்த்தால்
கதிரொளியைப்போல கவிதையாக
காலையில் பிரகாசமாய் தோன்றிப் பிறந்த கவிதை
காணாது போயிருக்கும் !
கருவில் தொலைந்த குழந்தையைப் போல…
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.