கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை: உஷா முத்துராமன்

கவிதைமணி

அன்னையின் வயிறுதான் 
பெண்ணே உனக்கு கருவறை!

கண்ணே என்று 
கொஞ்ச வேண்டிய 
உன்னை....... நீ 
கண் திறக்கும் முன்னேயே 
கருவறை  உனக்கு 
பிணவறையாவது  
கன நேரம் வரும் கெட்ட சிந்தனையால்தான்!

அன்னை தெரசாவின் 
அன்னை அவரை 
கருவறையிலேயே தொலைத்திருந்தால்
கருணை உள்ளம் கொண்ட 
"தெரசா" அன்னை  கிடைத்திருப்பாரா?

சிந்தியுங்கள் மனிதர்களே..... 
நிந்தனை செய்யும் உலகிற்கு 
இரட்டை நாக்குதான்..
இரண்டையும்  புரட்டி போட்டு 
புரளி பேசும் ஞாலத்தில் 
கருவிலேயே தொலைந்த 
குழந்தை பற்றியும் நாலும் பேசும்!

கவிஞனின்  கரு தொலைந்தால் 
கவிதை என்ற சிசு உயிரிழக்கும்!
கதாசிரியரின்  கரு தொலைந்தால் 
கதை என்ற சிசு உயிரிழக்கும்!
கவிதையும்,கதையும் கூட இல்லாமல் 
உயிர் வாழலாம்!
மழலை இல்லா உலகம் நரகம்!

கருவில் தொலைந்த குழந்தைகள் 
போனது  போகட்டும்...... இனி 
உயிர் பெற செய்வோம்!            

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT