இங்கிலாந்தின் இயற்கைச்சொற்களில்
இந்திய இதயங்கள் மூழ்கிவிட்டன –
மெல்ல மெல்ல ஒரு மோகத்தை
குடித்துவரும் குடிமக்கள் –
அண்டை மொழி நனைத்த
தொண்டைக்குழிகள் –
பிழைப்பிற்கு உழைப்பா ?
இங்கிலீஷ் சாயம் பெற்ற உதடா ?
எது வேண்டும் ?
பட்டிமன்றமே வைக்கலாம்—
மொழிக்கென்று ஒரு பழமொழி
“ஆங்கிலத்தில் கல்
ஆடம்பரமாய் சொல்”
வெளியேறியது வெள்ளையன் மட்டுமே –
இங்கே மனங்களை அடிமையாக்கி
அரியணையில் ஆங்கிலம் –
புயல், வெள்ளம், சுனாமி
மூன்றும் சேர்ந்தால்
கொடிகள் கை அசைக்குமா
செடிகள் தலை நிமிருமா ?
இந்த பேரிடரில் எங்கே தொலைத்தேன்
என் பிள்ளையை?
அட! அது இன்னும் பிறக்கவே இல்லையே !
கருவிலேயே தொலைந்த குழந்தையாய்
இன்று என் தமிழ் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.