கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை: பி.பிரசாத்

கவிதைமணி

என்வீட்டுத் தோட்டத்தில்
விதையிட்டு நீரூற்றி..
என்னுயிராய் நான் வளர்த்தேன்
மலர்செடியை சீராட்டி !
கண்கவரும் பூ பூக்கும்
என்னுடைய பூசைக்கென‌.
என்னென்னவோ கனவுடனே
நானிருக்கும் வேளையிலே

எங்கிருந்து வந்ததிந்த‌
புயல்காற்று நானெறியேன் !
அங்குஒரு மொட்டவிழும்
சுந்தரத் தருணம் முன்னே
வெட்டி அந்த பூச்செடியை
வீழ்த்தியதே ! என்ன செய்வேன் !

காதல் என்னும் விதைவிதைத்து
மோகமென்னும் நீரிறைத்து
ஆசையுடன் நான் வளர்த்தேன்
என்வயிற்றில் சீமாட்டி !
வந்ததொரு வாரிசுதான்
வாரித்தரும் இன்பமெலாம்
இன்னும்பல விதவிதமாய்
நான்நினைத்த‌ போதினிலே

"முந்தி வரும் பெண்மகளே"
ஜோசியத்தில் சொன்னாரென்று
வந்துசொல்லி என்கருவை
சிதைக்கச் சொல்லி சீறுகிறார்
காட்டுப்புயல் ஆனாலென்ன?
வீட்டுப்புயல் ஆனாலென்ன?
மொட்டுவிடா பூக்களெல்லாம்
சட்டுன்னுதான் சாயும்தானே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT