கவிதைமணி

என்றும் என் இதயத்தில்:  சீர்காழி .ஆர்.சீதாராமன் 

கவிதைமணி

மண்வாசனை தமிழ் மொழி
வாசனை தாய் பாசத்தின்
பெருவாசனை என்றும் என்
இதயத்தில்  நிறைந்தவை

பெண்களின் ஓயாத உழைப்பு
அலைகளின் ஓயாத முயற்சி
சூரிய சந்திரனின் சுழற்சி
என்றும்  என்  இதயத்தில் 

முதல் காதல் முதல் சம்பளம்
முதல் முத்தம் முதல் பக்தி
முதல் இரவு முதல் அழுகை
என்றும்  என்  இதயத்தில் 

அலைபாயும் மனம் இசை
கேட்டால் அமைதி பெறும்
உள்ளம் அனுபவம் அமைதி
என்றும்  என்  இதயத்தில்

ஆசிரியர்களின் மீது அன்பு
நண்பர்கள் மீது ஈர்ப்பு ஆசை
பயணத்தின் மீது மோகம்
என்றும்  என்  இதயத்தில் 

தர்மவழி இறை சேவை
இயன்ற உதவி இரக்கம்
மழலை மோகம் இனியகனவு
என்றும்  என்  இதயத்தில் 

உறவின் பெருமை பிரிவின்
தாக்கம் தனிமையின் தாகம்
இளமை வேகம் முதுமை
முதிர்ச்சி அனுபவப் பாடம் 

இயற்கையின் அழகும் தினம்
தரும் பாடமும் கவிதையும்
ரசிப்பும் அறுசுவை உணவும்
என்றும்  என்    இதயத்தில்
மாறாத நினைவலைகள் ... 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT