அன்புகொண்டு வாழ்ந்திடுவோர் அகத்தில் என்று அமர்ந்திருப்பார் நல்வழிகள் காட்டத் தானேவென்றுயர்வே பெறுவதற்கே நம்முள் நின்று வினைபுரிவார் ஆதரவாய் வழிகள் தந்து துன்பத்திலும் துயரத்திலும் நம்மை காத்து தூயநிலை பெறுவதற்கே வாழ்த்துச் சொல்வார்என்மனதில் குணமொளிர செய்வார் எல்லாம் “என்றும்என் இதயத்தில் இனிதாய் வாழ்வார்தப்பாகும் கொடுமைகளை தடுத்தே காப்பார் தரமோங்க என்புகழை பரவச் செய்வார்எப்போதும் என்நலத்தை பேணிக் காத்து என்வழியில் மலர்போட்டு இதமாய் செய்வார்முப்போதும் என்மனதில் காவல் நின்றே முனைப்போடு நல்வழியில் நடக்கச் செய்வார்இப்போதும் மனதாலே தாழ்ந்து வீழ்ந்து என்றும் என்இதயத்திலே உயர்வாய் வைப்பேன்கற்றுயர்ந்த மேலோரை கனிவாய் கண்டு காதலுற்று அவருடனே இணக்கம் கொள்வேன்பெற்றிருக்கும் அறிவென்றும் பெரிதே இல்லை பெறப்போகும் அறிவதனால் தெளிவே தோன்றும்நற்றமிழை நான்நெஞ்சில் வைத்துப் போற்றி நாள்தோறும் தமிழ்தாய்கே வணக்கம் சொல்வேன்இற்றைநாள் மட்டுமல்ல எற்றை நாளும் என்றும்என் இதயத்தில் நல்லோர் வாழ்வார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.