கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: கவிரசிகன் கார்த்திகேயன்

கவிதைமணி
ஓர் அன்னையின் பாச புலம்பல் இது...முகம் பார்க்கும் முன்னே,முதல் காதல் கொண்டேன் !!!வயிற்றினுள் உதைத்தாய்...வலியிலும் சுகம் கண்டேன்!!!கருவிலே உந்தன்,உருவம் உணர்ந்தேன்...உயிர் போகும் வலியைபிரசவத்திலே தந்தாய் !!!உதிரம் உதிர்த்து பாலூட்டி,நிலவை காட்டி சோறூட்டி,இசை பாடி தாலாட்டி -உன்பசி ஆற்றினேன் ஆனந்தமாய்!!!உன் ஆசைகள் எல்லாம்நிறைவேற்றிட வேண்டிஇரவும் பகலுமாய்ஓய்வின்றி உழைத்தேன்...பருவம் வந்ததும் நீஉருவம் மாறினாய்...இருந்தும் எனக்கு நீகுழந்தையாய் தோன்றினாய் !!!அறிவு பெற்ற பின் - நீஅயல்நாடு சென்றாய்...அங்கேயே உன்னவளைகண்டேன் என்றாய்...திருமணம் செய்த பின்பு,திரும்பி கூட பார்க்கலையே...விரும்பி நானும் வந்தாலும்நெருங்கி விட மறுக்கிறயே...தாயாக வைத்தவனே - எனைதனியாக வைத்துவிட்டாய் !!!நோயால் நொந்ததில்லை - உன்வாயால் நொந்து போனேன்...வலிகள் தெரியா வாழ்வை தந்தேன்...இருந்தும் என்னைமறந்தாய் கண்ணா !!!மனைவி ஒருத்திவந்தாள் என்று...கடவுளை தினமும்வேண்டிக் கொள்வேன்...நாளை....என் மகன், என்போல் இங்குவந்திட கூடதென்று...இன்று நான்முதியோர் இல்லத்தில்...என்றும் நீ என் இதயத்தில்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT