நின்றனர், இருந்தனர், கிடந்தனர், திரிந்தனர்,
நின்றுஇலர், இருந்துஇலர், கிடந்துஇலர், திரிந்துஇலர்,
என்றும் ஓர் இயல்வினர் என நினைவுஅரியவர்,
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே.
எம்பெருமான் நிற்கிறான், இருக்கிறான், கிடக்கிறான், திரிகிறான், அதேசமயம் அவன் நிற்கவில்லை, இருக்கவில்லை, கிடக்கவில்லை, திரியவில்லை... இவ்வாறு ஒன்றுக்கொன்று மாறுபட்டதன்மையில் தோன்றுகிறவன் அவன்,
ஆகவே என்றைக்கும் அவன் ஒரே இயல்போடு இருப்பான் என எண்ண இயலாது, அதேசமயம், எப்போதும் இந்த ஒரே இயல்போடுதான் அவன் இருக்கிறான், (எப்போதும் ஒரே இயல்பில் இருப்பதில்லை என்பதே அவனது இயல்பு.)
அத்தகைய பெருமான், எங்கள் தலைவன், திடமான மன உறுதியைக் கொண்டவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.