நாள்தோறும் நம்மாழ்வார்

மூன்றாம் பத்து இரண்டாம் திருமொழி - பாடல் 3, 4

கையில் ஏந்தியது ஆயுதம் அல்ல

செ.குளோரியான்

கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர்
எல்லாச் சேனையும் இடுநிலத்து அவித்த எந்தாய்,
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா,
சொல்லாய், யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே.

பாரதப் போரின்போது நீ கையில் ஏந்தியது ஆயுதம் அல்ல, யாரையும் கொல்லாத, குதிரை ஓட்டுகிற சாட்டைதான், ஆனால், அதைக்கொண்டே அனைத்துச் சேனைகளையும் அழித்தாய், எங்கள் தந்தையே, பொல்லாத இந்த உடல் என்னும் கட்டை என்னால் அறுக்க இயலவில்லை, நான் உன்னைச் சேர்வது எப்படி? அதற்கு ஒரு வழி சொல்.

•••

பாடல் - 4

சூழ்ச்சி ஞானச் சுடர்ஒளிஆகி என்றும்
ஏழ்ச்சி, கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய்,
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி யான்சேரும் வகை அருளாய் வந்தே.

எல்லாரையும் சூழக்கூடிய ஞானச்சுடரொளி நீ, என்றும் வளர்தல், தேய்தல் இல்லாமல் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் எங்கள் தந்தை நீ,  தாழ்வான விஷயங்களை நான் தவிர்க்க வேண்டும், உன்னுடைய திருவடிகளின் கீழ் வாழ வேண்டும், அதற்கு வழி சொல்வாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT