பாடல் - 11
கார்வண்ணன், கண்ணபிரான், கமலத் தடம்
கண்ணன்தன்னை
ஏர்வள ஒண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர்வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர்வண்ணத்தால் உரைப்பார் அடிக்கீழ்ப் புகுவார்
பொலிந்தே.
மேகவண்ணம் கொண்டவன், கண்ணபிரான், தாமரை போன்ற பெரிய திருக்கண்களைக் கொண்டவன் எம்பெருமான், அழகிய, வளம் நிறைந்த, ஒளி நிறைந்த வயல்களால் சூழப்பட்ட குருகூர்ச் சடகோபன், அப்பெருமானைப் பற்றிச் சிறப்பான, நன்மை நிறைந்த ஆயிரம் தமிழ்ப்பாடல்களைப் பாடினார், அந்த ஆயிரத்தில் இந்தப் பத்து பாடல்களையும் அமுதம் பருகுவதுபோல விருப்பத்துடன் சொல்பவர்கள் எம்பெருமானின் திருவடியை அடைந்து பொலிவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.