நாள்தோறும் நம்மாழ்வார்

ஐந்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பிழைப்பதற்கான வழி

செ.குளோரியான்

பாடல் - 5

செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்றது, இவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை, அரக்கர், அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை, தொண்டீர், ஊழி பெயர்த்திடும் கொன்றே.

இவ்வுலகத்தில் எல்லா மக்களும் செய்வது ஒரே ஒரு விஷயம்தான், அதுமட்டும்தான் என் கண்ணில் தெரிகிறது. அந்த ஒரு விஷயம்: வைகுந்தனான எம்பெருமானின் பக்தர்களாகி, விருப்பத்துடன் எங்கும் பரவி நின்று வழிபடுவதுதான். ஒருவேளை, பிற விஷயங்களில் விருப்பமுள்ளவர்களாக, அரக்கர்களாக, அசுரர்களாக நீங்கள் பிறந்திருந்தால், நீங்கள் பிழைக்க வேறு வழியே இல்லை, எம்பெருமானின் பக்தர்கள் இந்த யுகத்தையே நல்லமுறையில் மாற்றிவிடுவார்கள், தீமைகள் அழிந்துபோகும். இதில் சந்தேகமில்லை.

******

பாடல் - 6

கொன்று உயிர் உண்ணும் விசாதி, பகை, பசி, தீயன
                                                                                     எல்லாம்
நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர்
                                                                                    போந்தார்,
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்,
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர், சிந்தையைச்
                                                                                    செந்நிறுத்தியே.

உயிர்களைக் கொன்று தின்கின்ற வியாதி, பகை, பசி, தீயவை அனைத்தையும் போக்குவதற்காக, சக்ராயுதம் ஏந்திய எம்பெருமானின் பக்தர்கள் வந்தார்கள், நல்ல இசையோடு அவன் புகழைப் பாடி, துள்ளி ஆடி, உலகெங்கும் செல்கிறார்கள், தொண்டர்களே, நீங்களும் சென்று அவனை வழிபடத் தொடங்குங்கள், மனத்தை நல்ல வழியில் செலுத்துங்கள், அதுவே நீங்கள் பிழைப்பதற்கான வழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT