நாள்தோறும் நம்மாழ்வார்

ஐந்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

நாவால் சொல்லி

செ.குளோரியான்

பாடல் - 9

மேவித் தொழுது உய்ம்மின் நீங்கள், வேதப் புனித இருக்கை
நாவில் கொண்டு அச்சுதன்தன்னை ஞான விதி பிழையாமே
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே.

வேதங்களில் மிகவும் புனிதமாகக் கருதப்படும் புருஷசூக்தம் போன்றவற்றை நாவால் சொல்லி, ஞானவிதிகளின்படி அச்சுதனை வழிபடுகிறார்கள் பக்தர்கள், பூவும் நறுமணப்புகையும் விளக்கும் சந்தனமும் நீரும் தந்து வணங்குகிறார்கள், அத்தகைய அடியவர்களும் பக்தர்களும் நிறைந்த உலகம் இது… நீங்களும் அப்பெருமானைத் தொழுது உய்யுங்கள்.

*******

பாடல் - 10

மிக்க உலகுகள்தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்கபிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்,
ஒக்கத் தொழகிற்றிர் ஆகில் கலியுகம் ஒன்றும் இலையே.

உலகங்கள் எங்கும் சிவபெருமான், பிரம்மன், இந்திரன் தொடங்கி அனைத்து அமரர் கூட்டங்களும் கண்ணனின் திருமூர்த்தியை வணங்குகிறார்கள், தொண்டர்களே, நீங்களும் அவர்களைப்போல் எம்பெருமானை வணங்குங்கள், இந்தக் கலியுகத்தின் தீமைகள் உங்களை ஒன்றும் செய்யாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT