நாள்தோறும் நம்மாழ்வார்

ஐந்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 11

ஒளி நிறைந்த

செ.குளோரியான்

பாடல் - 11

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு
                                                                        அருள்செய்யும்
மலியும் சுடர் ஒளி மூர்த்தி, மாயப்பிரான் கண்ணன்
                                                                        தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசு அறுக்கும்மே.


கலியுகத்தால் வருகிற துன்பங்களெல்லாம் தன்னுடைய அடியவர்களுக்கு இல்லாதபடி அருள்செய்கிற எம்பெருமான், சுடர் ஒளி நிறைந்த மூர்த்தி, மாயப்பிரான், கண்ணன், அவனுடைய புகழை, நிறைந்த வயல்கள் சூழ்ந்த, தென் திசையிலுள்ள திருக்குருகூர்க் காரிமாறன் சடகோபன் ஆயிரம் பாடல்களில் ஒலிச்சிறப்போடு பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடினால், உள்ளத்தில் உள்ள குற்றங்கள் அறுந்துபோகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT