பாடல் - 11
எங்கே காண்கேன் ஈன் துழாய்
அம்மான்தனை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அம் தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண இப்பிறப்பே
மகிழ்வர் எல்லியும் காலையே.
குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்த அம்மானை நான் எங்கே காண்பேன் என்று எம்பெருமானிடம் ஈடுபட்டவர், அந்த இறை அனுபவத்தின் சொற்களாலே அப்பெருமானைப் பாடிய அழகிய, குளிர்ந்த குருகூர்ச் சடகோபன், அவர் சிறப்பாகச் சொன்ன ஆயிரம் திருப்பாடல்களிலே இந்தப் பத்து பாடல்களையும் சொல்ல வல்லவர்கள் இந்தப் பிறப்பிலேயே, இங்கேயே எல்லாரும் காணும்படி இரவும் பகலும் எம்பெருமானை அனுபவித்து மகிழ்வார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.