நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

எழுந்தருளியிருக்கும் மாயப்பிரான்

செ.குளோரியான்


பாடல் - 3

ஒருவர், இருவர், ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும்தோறும் தித்திப்பான்
திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை
மருவி உறைகின்ற மாயப்பிரானே.

அன்று அரக்கர்களுடன் போர் புரிகையில் ஒருவராகவும் இருவராகவும் மூவராகவும் மாறிமாறி வந்தான் எம்பெருமான், பின்னர் தன் உருவமே யாருக்கும்
தெரியாதபடி மிகவேகமாகச் சுழன்று சுழன்று போர் புரிந்தான், அத்தகைய எம்பெருமான், நினைக்கும்போதே இனிக்கிறவன், திருமகள் அமரும் திருமார்பைக் கொண்டவன், திருக்கடித்தானத்தில் எழுந்தருளியிருக்கும் மாயப்பிரான்.

பாடல் - 4

மாயப்பிரான் என் வல்வினை மாய்ந்து அற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்,
தேசத்து அமரர் திருக்கடித்தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே.

ஒளி மிகுந்த தேவர்கள் எம்பெருமானை வணங்கும் திருத்தலம், திருக்கடித்தானம். மணம் வீசுகிற பொழில்கள் விளங்கும் அந்தத் திருத்தலத்திலே கோயில் கொண்ட பெருமான், மாயப்பிரான், தன்னுடைய நேசத்தினால் என் வலிய வினைகளை அழித்தான், என் நெஞ்சையே பரமபதமாகக் கருதி அங்கே குடியேறினான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT