நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

ஆயர்களுக்கு அதிபதி

செ.குளோரியான்


பாடல் - 9

தாயப்பதிகள் தலைசிறந்து எங்கு எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத்து அமரர் திருக்கடித்தானத்துள்
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே.

ஒளி நிறைந்த வானுலக அமரர்களெல்லாம் விரும்பி வணங்குகிற திருக்கடித்தானத்திலே எழுந்தருளியிருப்பவன், ஆயர்களுக்கு அதிபதி, அற்புதன், எம்பெருமான், தனக்கு உரிமையான பல தலைசிறந்த புனிதத்தலங்களிலெல்லாம் விருப்பத்துடன் எழுந்தருளி வீற்றிருப்பவனும் அவனே.


பாடல் - 10

அற்புதன், நாராயணன், அரி, வாமனன்
நிற்பது, மேவி இருப்பது என் நெஞ்சு அகம்,
நல் புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே.

அற்புதன், நாராயணன், அரி, வாமனன், எம்பெருமான் பொருந்தியிருப்பது என் நெஞ்சினுள்ளே. அதற்காக, நல்ல புகழ் வாய்ந்த வேதியர்கள் நான்கு வேதங்களையும் நிலைபெற்று முழங்குகிற, கற்பகச்சோலைகள் சூழ்ந்த திருக்கடித்தானத்திலே அப்பெருமான் நிற்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT