எனக்குத் தெரிந்த நியாயம் சொல்கிறேன்-சோ, ரூ.580, பக்.416, அல்லயன்ஸ் கம்பெனி, மயிலாப்பூர், சென்னை-600 004. ✆ 044 24641314.
பொது இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் செயல்பாட்டை பொதுமக்கள் பார்த்து கவலைப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதே நிலையை கடந்த 1976-ஆம் ஆண்டுகளிலேயே கண்ட நூலாசிரியர் சோ துக்ளக் இதழில் விடுத்த வேண்டுகோள், 'மாண்புமிகு மாணவர்கள்' எனும் தலைப்பில் கட்டுரை எழுதி அனைவரது கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளார். அவரது கருத்தை மையமாக்க ஒரு விவாதமே நடந்துள்ளதையும் இந்நூலில் வாசகர், எழுத்தாளர், ஆசிரியர் என அனைவரும் பங்கேற்றிருப்பதையும் நூலில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நூலின் 5-ஆவது கட்டுரையான 'கேள்வியும் நானே பதிலும் நானே' பகுதியில் திமுகவை சோ ஆதரிப்பதாக எழுந்த விமர்சனத்துக்கு அவர் அளித்துள்ள விளக்கமும், அன்றைய நிலையில் பிரபல வார இதழ்களின் செயல்பாடுகளையும் படிக்கும் போது அந்நிலை இன்றளவும் மாறாததைக் கண்டு வியப்பு ஏற்படுகிறது.
'எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வது பற்றி' எனும் கட்டுரையில் மத்தியில் அன்றைய காலகட்டத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள், அன்றைய ஆளும் காங்கிரஸýக்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் உருவாக வேண்டிய அவசியம் என சமூகத்தின் அரசியல் நிலையை அலசி ஆராய்ந்திருப்பதும், தேச நலன் சார்ந்த கொள்கைகளே தேவை எனும் நிலையில், ஆளும் கட்சியை கண்மூடித்தனமாக எதிர்ப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் கூறியிருப்பதும் இன்றைக்கும் பொருந்துவதாகவே உள்ளது.
ஒவ்வொரு கட்டுரையிலும் தற்போதைய சமூக, அரசியல் நிலை குறித்த கவலையை நூலாசிரியர் வெளிப்படுத்தியிருப்பதையும், அவரது மறைவுக்குப் பிறகும் அந்த நிலை தொடர்வதையும் படித்தால், அவரின் தொலைநோக்கு சிந்தனையை உணர முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.