இஸ்லாம்-மனிதகுலத்திற்கு வழங்கியது என்ன?-டாக்டர்.கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்; பக்.172; ரூ.175; இஸ்லாமிய நிறுவன ட்ரஸ்ட்-சென்னை-12. ✆ 044-26624401
'இஸ்லாத்துக்கு முன்னால்-இஸ்லாத்துக்கு பின்னால்' என்ற வரலாற்றை புரட்டி மனித வளர்ச்சிக்கு இஸ்லாம் அளித்த பங்களிப்பை இந்த நூல் தெள்ளத் தெளிவாக வழங்குகிறது.
ஆறாம் நூற்றாண்டில் நிலவிய பண்பாடற்ற சமூகத்தை மனிதர்களின் மூலமே சரி செய்ய இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்). நபிகள் நாயகம் வழங்கிய ஓரிறைக் கோட்பாடு எனும் இஸ்லாம், மக்கள் மத்தியில் எப்படி சிந்தனை, ஒழுக்கம், செயல் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தி புரட்சி செய்தது என்பது இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
சகிப்புத் தன்மை, சமூக நல்லிணக்கம், அரசியல், பெண்களின் மாண்புகள், போர் தர்மங்கள், அறிவியல் ஆகியவற்றுக்கு இஸ்லாம் அளித்த கோட்பாடுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோட்பாடுகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு மனிதகுலம் அடைந்த வளர்ச்சி குறித்தும், அந்த இஸ்லாமியக் கோட்பாடுகள் குறித்து உலக அறிஞர்கள் பலர் தெரிவித்த கருத்துகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
இம்மைக்குப் பின் மறுமை வாழ்க்கை உண்டு என்பதையும், அங்கு அனைவரும் இறைவன் முன் நிறுத்தப்பட்டு அவரவர் செயலுக்கேற்ப வெகுமதி அளிக்கப்படும் என்ற மறுமை நம்பிக்கையை அளித்து இவ்வுலக வாழ்க்கை தற்காலிகமானது, மறுமை நிலையானது என்றும் மறுமையின்
வெற்றிக்காக இவ்வுலக வாழ்க்கையைப் பயன்படுத்த வேண்டும் என்ற இஸ்லாத்தின் கோட்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில் மனித வளர்ச்சிக்கு இஸ்லாம் அளித்த பங்களிப்பு ஒரே நூலாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.