நூல் அரங்கம்

சுய ஒழுங்கே தலைவிதியைத் தீர்மானிக்கும்

ஆத்மா மீது ஆதிக்கம் செலுத்தவும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.

DIN

சுய ஒழுங்கே தலைவிதியைத் தீர்மானிக்கும்; ரயன் ஹாலிடே (மொழிபெயர்ப்பு பிஎஸ்வி குமாரசாமி); பக்.372; விலை ரூ.499; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2-ஆவது தளம், உஷா பிரீத் காம்ப்ளக்ஸ், 42, மாளவியா நகர், போபால், 462003.

கடந்த நூற்றாண்டில் மன்னராக இருந்தவர்களால்கூட அனுபவிக்க முடியாத பல வசதிகளை இன்றைய வளர்ந்த நாடுகளில் வாழும் சாதாரண குடிமக்கள் அனுபவித்து வருகிறார்கள். ஆனாலும் இந்த சாதாரண மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாதவர்களாக இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? எதைச் செய்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதைத்தான் விளக்குகிறது இந்நூல்.

தலைவிதி என்று காரணம் சொல்லி வாழ்கை பிரச்னைகளை ஏற்று வாழ்வோர், கொஞ்சம் சிந்தித்து சுய ஒழுங்குடன் செயல்படவேண்டும். அந்த சுய ஒழுங்கே தலைவிதியைத் தீர்மானிக்கும் என்பதைப் பின்பற்ற பல உள்ளடக்கங்கள் இதில் உண்டு. உடல், மனம், ஆத்மா- இவைதான் அதற்கான வழி என்ற அடிப்படையில் விளக்கங்கள் விவரமாக உள்ளன.

இதேபோன்று மனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான வழிகள், கடினமான விஷயங்களை முதலில் செய்துவிடுதல், எச்சரிக்கையாக இருத்தல் என பல விஷயங்கள் சிந்திக்க வைக்கின்றன. அதேபோல ஆத்மா மீது ஆதிக்கம் செலுத்தவும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.

நெப்போலியன், பேப் ரூத் போன்றோரின் கதைகளிலிருந்தும் இதற்கான மேற்கோள்கள் சொல்லப்பட்டுள்ளன.

சுய ஒழுங்குதான் நம்மால் எதைச் செய்ய முடியும் என்பதை தீர்மானிக்கிறது; சுய ஒழுங்கே நாம் யார் என்பதை முடிவு செய்கிறது; சுய ஒழுங்குதான் நம் தலைவிதியைத் தீர்மானிக்கிறது. அது உங்களிடம் இருக்கிறதா? விடைகாண விரும்புவோர் நூலைப் படிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!

சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

இந்தியாவுக்கு வரும் ரொனால்டோ..! எஃப்சி கோவா உடன் மோதல்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

மூர்த்தி நாயனார்

SCROLL FOR NEXT