ஊஞ்சல் - தீபா நாகராணி; பக்.153; ரூ. 230; ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடு, சென்னை-83; ✆ 96003 98660.
தனது நான்கு வயது முதல் நினைவிலிருந்த சம்பவங்களில் தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகளுடன் நம் எல்லோரின் வாழ்விலும் நடந்திருக்கும் அதே சம்பவங்களை நினைவூட்டும் கட்டுரைத் தொகுப்பை நூலாசிரியர் தந்திருக்கிறார். ஒரு பெண்ணாக, தனது பார்வையில் அச்சம், விருப்பம், சந்தேகம், வலி, என அனைத்தையும் வாசகர்களிடம் சமர்ப்பித்து ஒப்புதல் வாங்குவதாக இருக்கிறது இந்த நூல்.
குறிப்பாக, தொலைக்காட்சிப் பெட்டியின் வருகையின்போது நடந்த சம்பவங்கள் நாற்பதுகளில் இருக்கும் எல்லோரும் அனுபவித்ததே; சுற்றுலா சமய கொண்டாட்டங்கள்; பருவ வயதில் தவிர்க்க நினைத்த வார்த்தைகள், முதல் ஊசி, முதல் சோகம், முதல் அச்சம் என எல்லாவற்றையுமே பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
தனது வாழ்வின் பயணத்தில் கடந்த எல்லா நிறுத்தங்களிலும் தான் கண்ட வெயிலை, நிழலை, மழையை , மக்களை, உறவுகளை நம் கண் முன் நிறுத்தி, அதேபோலான நமது நிறுத்தங்களில் நினைவலைகளைத் தேட வைத்துள்ளது இத்தொகுப்பு.
முதல்முதலாக கேட்ட இசை, பார்த்த திரைப்படங்கள், வாசித்த புத்தகங்கள் எல்லாவற்றிலுமே நூலாசிரியர் என்ன உணர்ந்திருக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது இந்நூல். குறிப்பாக, கல்கியின் சிறுகதைகளில் வரும் சொற்றொடர்கள் சினிமாவின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு பக்கபலமாக இருப்பதை காட்டுகிறார்.
நடைப்பயிற்சியைக்கூட ஓர் தியானம் போல் செய்யச் சொல்லும் இந்த நூல் நாற்பதுகளில் இருக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்குமானதும்கூட.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.