நூல் அரங்கம்

நம் காலத்தின் கதை

ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் வகையிலான சுவாரஸ்யமான நூல்.

DIN

நம் காலத்தின் கதை; கார்குழலி; பக். 168; ரூ.200; கிழக்கு பதிப்பகம், சென்னை -14. ✆ 9500 045609

பொதுவாக சிறுகதை, புதினம், கவிதைகள் ஆகிய வகைப்பாடுகளில்தான் அதிகமான புத்தகங்கள் வெளிவருகின்றன. இந்த 'நம் காலத்தின் கதை' நூல் சற்று வித்தியாசமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. "வானை அளப்போம்' என்ற தலைப்பில் தொடங்கி 'பொன்னாக மின்னும் காக்கை' வரை மொத்தம் 26 தலைப்புகளில் அருமையான தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

நமக்குத் தெரிந்த சமகாலத்து தகவல்கள், நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகள், அதன் பின்னணி விவரங்கள் ருசிகரமாகத் தரப்பட்டுள்ளன. குரங்கு வழிபாடு, செல்லப்பிராணிகளின் வளர்ப்பு, காக்கைகளைப் பற்றிய தகவல்கள் எல்லாமே வியப்பை ஏற்படுத்துகிறது.

நீலமணிக்கல்லின் அதிசயக் கதை , ஒலிம்பிக்ஸில் நிலவும் பாலின சர்ச்சை, சீழ்க்கை (விசில்) அடித்து மனிதர்களை அடையாளம் காணும் கிராமம், பத்திரிகைகளில் வெளியாகும் குறுக்கெழுத்து போட்டிக்கும் மனித உடற்பயிற்சிக்குமான தொடர்பு, தையல் இயந்திரத்தின் வரலாறு, ஆதிகாலத்தில் மனிதன் எந்தெந்தக் கருவிகளால் உடைகளை தைத்துக்கொண்டான் போன்ற விவரங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன.

'பிரமிடு எனும் கலாசார அதிசயம்' உண்மையில் அனைவும் அறிந்துகொள்ள வேண்டிய அதிசயம்தான். மரங்களின் மெüனமொழி என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள தகவல்கள் சென்னைவாசிகளுக்கு நல்ல தகவல். ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் வகையிலான சுவாரஸ்யமான நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!

சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

இந்தியாவுக்கு வரும் ரொனால்டோ..! எஃப்சி கோவா உடன் மோதல்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

மூர்த்தி நாயனார்

SCROLL FOR NEXT