நூல் அரங்கம்

சினிமா ஸ்டார்ட்...கேமரா...ஆக்ஷன்... ரிலீஸ்!

வெற்றியாளர்களின் வாழ்க்கைப் பாடங்களும் இதில் உண்டு.

தினமணி செய்திச் சேவை

சினிமா ஸ்டார்ட்...கேமரா...ஆக்ஷன்... ரிலீஸ்!-பாலபாரதி; பக்.224; ரூ.225; எஸ் பப்ளிகேஷன்ஸ்; சென்னை-600122. ✆ 8015827644.

சினிமா என்கிற அரண்மனையின் ஒட்டுமொத்த அரங்குகளையும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட கட்டமைப்புகளின் பலத்தால் வென்ற திரைப்படங்களின் பெயர்களையும் அதன் காலத்தையும் தந்து, கூடவே அதன் புகைப்படங்களையும் பதிவிட்டு ஒரு காலப் பெட்டகமாகத் திகழ்கிறது இந்தப் புத்தகம்.

முன்பெல்லாம் திரைப்படக் கனவுகளோடு வரும் ஓர் இளைஞன் மிகவும் கஷ்டப்பட்டு ஓர் இயக்குநரிடம் உதவியாளராக சேர்ந்து தான் கையில் வைத்திருக்கும் கதைகளுடன் அலைந்து திரிந்து ஒரு தயாரிப்பாளரைச் சந்திப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். ஆனால், இப்போது ஒரு குறும்படம் மட்டும் எடுத்து சின்னத்திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டு உடனடியாக இயக்குநராகிவிட வாய்ப்பு அளிக்கிறது இந்த எண்ம உலகம் என்பதை பதிவிடுகிறது இப்புத்தகம்.

தயாரிப்பில் இருந்து தொடங்கி தற்போதைய எண்ம உலகம் வரை அதன் ஒவ்வொரு பரிணாமத்தையும் தந்து திரைப்படக் கனவுகளுடன் உள்ளோருக்கு ஆலோசனை தருவதாகவும் திரைப்படங்கள் குறித்து தெரிந்து கொள்ள நினைக்கும் சாமானியனுக்கு வியப்பைத் தருவதாகவும் உள்ளது இந்த நூல். வெற்றியாளர்களின் வாழ்க்கைப் பாடங்களும் இதில் உண்டு.

தயாரிப்பாளர்களின் பயம், விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பு, கதையின் புரட்சி, இசையின் ஊடுருவல், நட்சத்திரங்களின் வெளிச்சம், சண்டைப் பயிற்சியாளர்களின் தியாகம் என எல்லா துறைகளும் சொல்லப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தில், ரசிகன் மட்டும்தான் அப்படியே இருக்கிறான் என்பதை மறக்காமல் சொல்கிறது இந்தப் புத்தகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

ஜமைக்கா: 3-ஆவது முறையாக பிரதமா் ஆகும் ஹால்னஸ்

அமைச்சா் துரைமுருகனுக்கு எதிரான பிடிஆணையை அமல்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஆப்கன் நிலநடுக்கம்: 2,200-ஐ கடந்த உயிரிழப்பு

தேசிய தரவரிசைப் பட்டியல்: சாதித்த கோவை கல்வி நிறுவனங்கள்

SCROLL FOR NEXT