9. முளைக்கதிர் இளம்பிறை - பாடல் 2
கிழிக்கப்பட்ட: மான், புலி, யானை ஆகிய விலங்குகளின் தோல் என்றும், கிழிக்கப்பட்ட கோவண ஆடை என்றும் இரண்டு விதமாக பொருள் கூறுவார்கள்.
ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு
கூறினர் கூறினர் வேதம் அங்கமும்
ஆறினர் ஆறிடு சடையர் பக்கமும்
Advertisement
கீறின உடையினர் கெடில வாணரே

விளக்கம்

கீறின = கிழிக்கப்பட்ட: மான், புலி, யானை ஆகிய விலங்குகளின் தோல் என்றும், கிழிக்கப்பட்ட கோவண ஆடை என்றும் இரண்டு விதமாக பொருள் கூறுவார்கள். ஏறு = காளை மாடு: ஏழை = பார்வதி தேவி: பொதுவாக ஆண்களை விடவும் பெண்கள் உடல் வலிமையில் குன்றியவர்கள் என்பதால் பெண்களை ஏழைகள் என்று கூறுவது இலக்கிய மரபு.

பொழிப்புரை

காளை மாட்டினை வாகனமாகக் கொண்டவர் சிவபெருமான்: அவர் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவர்; வேதங்களையும் வேதங்களின் ஆறு அங்கங்களையும் மற்றவர்களுக்கு விரித்து கூறியவர்: கங்கை ஆற்றினை தனது சடையில் நிறுத்தியவர்: கிழிந்த கோவண ஆடையினை உடையவர்: மேற்கண்ட தன்மைகளை உடைய பெருமான் தான் கெடில வாணராக திருவதிகை வீரட்டத்தில் உறைகின்றார்.