9. முளைக்கதிர் இளம்பிறை - பாடல் 9
நறுமணம் வீசும்: பொறியுறு = புள்ளிகளை உடைய: நெறியுறு = சுருள்களை உடைய: கிறிபட = தந்திரமாக உழிதரல்
வெறியுறு விரிசடை புரள வீசியோர்
பொறியுறு புலியுரி அரையது ஆகவும்
நெறியுறு குழல் உமை பாகமாகவும்
கிறிபட உழி தர்வர் கெடில வாணரே

விளக்கம்

வெறியுறு = நறுமணம் வீசும்: பொறியுறு = புள்ளிகளை உடைய: நெறியுறு = சுருள்களை உடைய: கிறிபட = தந்திரமாக உழிதரல் = ஆடுதல்: தந்திரமாக நடனம் ஆடினார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதால், இந்த பாடல் தாருகவனத்து மகளிர் காண ஆடிய நடனக் காட்சியோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

பொழிப்புரை

நறுமணம் கமழ்கின்ற விரிந்த சடை அவிழ்ந்து தரையில் புரளுமாறும், இடுப்பினில் புள்ளிகள் உடைய புலித்தோல் ஆடையாகவும், சுருண்ட கூந்தலை உடைய உமையம்மை தனது உடலின் ஒரு பாகமாகவும் இருக்கும் கோலத்தில் கெடில வாணர் மாயக் கூத்து ஆடுகின்றார்.