சொற்றுணை வேதியன் - பாடல் 9
அனைத்து தேவர்களுக்கும் முதல்வன் சிவபிரான் என்பதுதான் அந்தக் காரணம்.
முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
Advertisement
நன்னெறியாவது நமச்சிவாயவே

விளக்கம்

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில், தனது துன்பங்களிலிருந்து விடுவிக்குமாறு வேறு எவரையும் வேண்டேன் என்று அப்பர் பிரான் கூறியதற்குக் காரணம், இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ளது. அனைத்து தேவர்களுக்கும் முதல்வன் சிவபிரான் என்பதுதான் அந்தக் காரணம். உலகில் உள்ள உயிர்கள் அனைத்துக்கும் மிகவும் நன்மை பயக்கும் நெறி, வீடுபேறு ஒன்றுதான். வீடுபேறு அடைந்த உயிர், உலகின் இன்ப துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று, சிவபிரானுடன் கலந்து என்றும் அழியாத இன்பத்தைப் பெறுகின்றது.

பொழிப்புரை

முதல்வனாகிய முக்கண்ணனே அனைவருக்கும் முன்னே தோன்றிய நெறியாவான். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபிரானின் செம்மையான நெறியை உறுதியுடன் சரணம் என்று வாழும் அடியார்களுக்கெல்லாம் மிகவும் நன்மை பயப்பதான, வீடுபேறு எனப்படும் நன்னெறியினை அளிப்பது நமச்சிவாய என்னும் மந்திரமாகும்.