முகப்பு
தினம் ஒரு தேவாரம்

2. கூற்றாயினவாறு - பாடல் 6

தான் செய்த தவற்றினை உணர்ந்து வருந்தி, இறைவனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டும் அப்பர் பிரான்

Updated On : 29 செப்டம்பர், 2015 at 12:30 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:25 PM

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்
நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே

விளக்கம்

உலந்தார் தலை = பிரம்மனின் தலை

அலந்துதல் = வருந்துதல்

உடல் என்பது இங்கே குடலைக் குறிக்கிறது.

தான் செய்த தவற்றினை உணர்ந்து வருந்தி, இறைவனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டும் அப்பர் பிரான், தான் தனது வாழ்க்கையை இனி எவ்வாறு நடத்துவேன் என்பதையும் இங்கே விளக்குகிறார். துன்பம் ஏற்பட்டபோது இறைவனின் அருளை வேண்டுவதும், அந்தத் துன்பம் துடைக்கப்பட்ட பின்னர் இறைவனை மறப்பதும் மனித இயல்பு. அந்த மனித இயல்புக்கு மாறாக, தான் நலமாக இருக்கும் தருணத்திலும், இடர்ப்படும் நேரங்களிலும் உன்னையே நினைத்து இருப்பேன் என்று இறைவனிடம் அப்பர் பிரான் இங்கே கூறுகிறார்.

அதற்கு ஏற்றாற்போல், தனக்கு பல இடர்ப்பாடுகளை சமணர்கள் செய்தபோதும், கலங்காமல் சிவபிரானையே நினைந்து இருந்தார். சமணர்கள் செய்த பல சூழ்ச்சிகளில் இருந்து சிவபெருமான் அருளால் தப்பிய அப்பர் பிரான், தனது எஞ்சிய வாழ்நாளில், பல தலங்கள் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி, நாடெங்கும் சைவ சமய உணர்வினைப் பரப்பி, அதன் மறுமலர்ச்சிக்கு அடிகோலினார்.

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் என்று இங்கே கூறும் அப்பர் பிரான், முறையாக தீபம் தூபம் ஏற்றி வழிபடும் அடியவர்க்கு அருள் புரிவதன் மூலம், சிவபிரான் மிகவும் இனிமையாக இருப்பார் என்று கடவூர் வீரட்டம் பதிகத்தில் கூறுகிறார். சிவபிரான், பித்தர் என்று இங்கே குறிப்பிடப்படுகிறார். பெரும்புலர் காலை என்பது, இரவின் நான்காவது (இறுதி) பகுதி, சூரிய உதயத்துக்கு ஒன்றரை மணி நேரம் முன்னர் உள்ள நேரம்.

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி

அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து

விரும்பி நல் விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக்

கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே

பொழிப்புரை

பிரம்மனின் தலையில் பலி ஏற்று உலகெங்கும் திரியும் சிவபெருமானே, கெடில நதிக்கரையில் உள்ள அதிகை வீரட்டானத்தில் உறையும் இறைவனே, எனது உடலினை வருத்தும் சூலை நோயினை நீதான் தவிர்த்து அருள வேண்டும். நான் இனி எப்போதும் நீர், மலர்கள், தூபம் இவை கொண்டு உன்னை மறவாமல் வழிபடுவேன்; இனிமையான தமிழில் இசைப்பாடல்கள் பாடி உன்னை புகழ்வேன். வாழ்க்கையின் எந்த நிலையிலும், துன்பம் வந்த காலத்திலும் மற்றும் துன்பமின்றி இருக்கும் காலத்திலும் உன்னை என்றும் மறவாமல், உனது நாமங்களைச் சொல்லுவேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.