முகப்பு
தினம் ஒரு தேவாரம்

2. கூற்றாயினவாறு - பாடல் 8

எனக்குத் துணையாக எவரும் இல்லை.

Updated On : 29 செப்டம்பர், 2015 at 12:34 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:26 PM

வலித்தேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன் வஞ்சம் மனம் ஒன்று இலாமையினால்
சலித்தால் ஒருவர் துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை எம் பெருமான்
கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன
அலுத்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே

விளக்கம்

வலித்தல் = உயர்வாக எண்ணி செருக்கு கொள்ளுதல்

மனை வாழ்க்கை = உலக வாழ்க்கை

வஞ்சம் = உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல்

கலித்தல் = பெருகுதல்

ஒரு காதினில் குழை அணிந்தவனாக சிவபெருமானை சித்தரிக்கும் அப்பர், மற்றொரு காதில் தோடுடைய செவியன் என்பதை நமக்கு உணர்த்துகிறார்.

பொழிப்புரை

கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை நகரில் வீற்றிருக்கும் சிவபிரானே, இந்த உலக வாழ்க்கையை உயர்வானதாக எண்ணிக்கொண்டு மிகவும் மகிழ்ந்து செருக்கு கொண்டு இருந்தேன். ஆனால், இந்த உலக வாழ்க்கையின் வெறுமையினை உணர்ந்த நான், எனது மனதில் வஞ்சம் ஏதும் இல்லாத காரணத்தால், உண்மையை ஒப்புக்கொள்ளும் உணர்வுகொண்ட எனக்கு, இந்த வாழ்க்கை சலிக்கிறது. எனக்குத் துணையாக எவரும் இல்லை. வெண்ணிறச் சங்கினால் ஆன குழை என்ற அணியை காதினில் அணிந்தவனே, நாளுக்கு நாள் எனது வயிற்றின் உள்ளே வளர்ந்துகொண்டிருக்கும் இந்த சூலை நோய், எனது வயிற்றினை கலக்கி, உறுப்புகளை மயக்கமுறச் செய்தமையால், நான் மிகவும் வெறுத்துவிட்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.