முகப்பு
தினம் ஒரு தேவாரம்

20. செத்தையேன் சிதம்பன் - பாடல் 9

தசைகளுடன் இணைந்த உடலினைப் பேணும் எண்ணத்தில், உடலினை வருத்தும் நியமங்களில் ஈடுபடாமல் நான் இருக்கின்றேன்.

Updated On : 9 ஏப்ரல், 2016 at 4:39 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:30 PM

பாடல் 9

நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்க மாட்டேன்
மணத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும்
கணத்திடை ஆட்டப்பட்டு காதலால் உன்னைப் பேணும்
குணத்திடை வாழ மாட்டேன் கோவல் வீரட்டனீரே

விளக்கம்

கணம் = கூட்டம். மனைவி, மக்கள் மற்றுமுள்ள சுற்றத்தார்கள் கூட்டம். நிணம் = கொழுப்பு, சதை. யாக்கை = உடல். நியமம் = சிவ ஆகமங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள், தினமும் அனுசரிக்க வேண்டியவை. உடலின் மீது வைத்துள்ள பற்று நித்திய நியமங்களை கடைப்பிடிக்கத் தடையாக இருக்கும் நிலையும், சுற்றங்கள் இறையுணர்வில் ஈடுபட்டு பாசங்களை அறுத்து வாழ்வதற்கு தடையாக இருக்கும் நிலையம் இங்கே உணர்த்தப்படுகின்றது. மனைவி, மக்கள், மற்றுமுள்ள சுற்றங்களை காக்க வேண்டிய பொறுப்பு கொண்டுள்ள மனிதன், அவர்களைப் பேணுவதற்காக பொருள் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றான். பொருள் ஈட்டும் வழியில் ஈடுபடும்போது, இறை உணர்வுக்கு நேரமும் பொறுமையும் இன்றி, பெரும்பாலானோர் வாழ்வதை நாம் கண்கூடாக காண்கின்றோம். எனவே ஒருவகையில், இறை உணர்வினை வளர்த்துக்கொள்வதற்கு தடையாக, நமது மனைவி, மக்கள், சுற்றம் உள்ள நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை

தசைகளுடன் இணைந்த உடலினைப் பேணும் எண்ணத்தில், உடலினை வருத்தும் நியமங்களில் ஈடுபடாமல் நான் இருக்கின்றேன். திருமணம் மற்றும் பல விழாக்களில் நடைபெறும் கேளிக்கைகளில் ஈடுபட்டு, எனது சுற்றமாகிய கூட்டம் விரும்பும் செயல்களைச் செய்தவாறு வாழும் நான், அவர்கள் மீது கொண்டுள்ள பாசத்தை விலக்க முடியாமல் திண்டாடுகின்றேன். அதனால் உன் மீது அன்புகொண்டு உன்னைப் போற்றிப் புகழ்ந்து வணங்கி வாழாமல் இருக்கின்றேன். கோவலூர் வீரட்டத்தில் உறையும் பெருமானே, நீதான் மேற்கூறிய தடைகளை நீக்கி, நாம் நியமத்துடனும் இறை உணர்வினோடும் வாழ்வதற்கு அருள்புரிய வேண்டும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.