முகப்பு
தினம் ஒரு தேவாரம்

22. கடவுளைக் கடலுள் எழு - பாடல் 2

இந்த எட்டு மலர்களை உள்ளத்தில் வளர்த்துக் கொண்டு வழிபடும் அடியார்களின் உள்ளத்தில் ஒளி பெருகும். அவ்வாறு

Updated On : 19 ஏப்ரல், 2016 at 12:49 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:33 PM

பாடல் 2

கரும்பு ஒப்பானைக் கரும்பினில் கட்டியை
விரும்பு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
அரும்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரும்பு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே

விளக்கம்

விரும்பு = விரும்பப்படும் பொருட்களில் மிகவும் சிறந்தவன். சுரும்பு = தேன்வண்டு. கரும்பினைப் போன்றும் கரும்புக் கட்டி போன்றும் இனிப்பான் என்று கூறிய அப்பர் பிரானுக்கு, கரும்பும் கரும்புக் கட்டியும் விரும்பாத மனிதர்கள் எவரேனும் இருப்பாரோ என்ற ஐயம் எழுந்ததுபோலும். அவரவர் விரும்பும் பொருளாக இருப்பவன் இறைவன் என்ற பொருள் பட விரும்பு ஒப்பான் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். விரும்பு ஒப்பான் என்பதற்கு உயிர்களின் விருப்பத்தை ஒத்து பயன் விளைவிப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம். தாங்களும் தெய்வத்தன்மை உடையவர்கள் என்ற செருக்கு விண்ணோர்களுக்கு இருப்பதால், அவர்கள் காண அரியவனாக இருக்கும் சிவபெருமான், அத்தைகைய செருக்கு ஏதும் இன்றி, யான் எனது என்ற எண்ணங்கள் அற்று, சிவபெருமான் விரும்பும் அகமலர்கள் ஆகிய எட்டினைக் கொண்டு வழிபடும் மனிதர்களுக்கு தேன் மொய்க்கும் வண்டு போன்று அவர்களைச் சுற்றி வருவான் என்று கூறப்படும் விளக்கம் மிகவும் அருமையானது. கொல்லாமை, மற்ற உயிர்களின் பால் கருணை, ஐந்து பொறிகளையும் அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு மற்றும் அறிவு என்பவையே இந்த எட்டு குணங்கள். இந்த எட்டு மலர்களின் பயனாக உள்ள தேனைப் பருகுவதற்கு, மிகுந்த ஆவலுடன் சுற்றி வரும் வண்டாக சிவபெருமான் இருப்பான் என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது. சுரும்பு என்ற சொல்லினை அரத்துறை மேவிய என்ற சொற்களுடன் இணைத்து, அரத்துறைத் தலத்தினை சுற்றி வரும் தேன்வண்டு என்று இறைவனை குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

இந்த எட்டு மலர்களை உள்ளத்தில் வளர்த்துக் கொண்டு வழிபடும் அடியார்களின் உள்ளத்தில் ஒளி பெருகும். அவ்வாறு ஒளி பெருகிய உள்ளத்தினை பெருமான் சுற்றி சுற்றி வருவார் என்பதை பிடித்தபத்து பதிகத்தின் ஒரு பாடலில் மணிவாசகர் கூறுகின்றார். இந்த பாடலில் அவர், தக்க நேரத்தில் தனது குழந்தைக்கு பாலினை நினைந்து ஊட்டும் தாயினும் பரிந்து உதவி செய்பவன் சங்கரன் என்று கூறுகின்றார். குழந்தையின் உடல் உரம் பெறுவதற்காக தாய், தனது குழந்தைக்கு காலம் தவறாமல் பால் அளித்து வளர்க்கின்றாள். அழியக்கூடிய உடலினை விடவும் அழியாத தன்மை படைத்த உயிர் முக்கியம் வாய்ந்தது அல்லவா. அதனால் தான், உயிருக்குத் தேவையான ஞானத்தைத் தரும் பெருமானை, தாயினும் சாலப் பரிந்து உதவி செய்யும் பெருமான் என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார். தனது உயிர் உரம் பெறுவதற்காக இறைவன் தனது உள்ளத்தில் இருந்த இருளினை அகற்றி ஞானத்தை ஏற்படுத்தி ஒளி பெருக்கியதாக மணிவாசகர் இங்கே கூறுகின்றார். இவ்வாறு அருள்புரிந்த பெருமான், தான் செல்லுமிடமெல்லாம் வந்ததாக மணிவாசகர் கூறுகினார்.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருகி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே

கரும்புக் கட்டி என்பது நெடுநேரம் நமது வாயினில் இருந்து நமக்கு இனிப்புச் சுவையை அளிப்பது. சிவபெருமான் எவர்க்கு கரும்புக் கட்டியாக இருப்பார் என்பதை கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.31.4) விளக்குகின்றார் பொழுது புலர்வதற்கு முன்னர் எழுந்து நீராடி, பித்தராகிய சிவபெருமானுக்கு பக்தராக, மலர இருக்கும் அரும்புகள், மலர்கள் முதலியன கொண்டு, உள்ளத்தில் மிகுந்த ஆர்வத்துடனும் விருப்பத்துடனும், முறைப்படி தீபம் தூபம் முதலியன ஏற்றி சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு கரும்பினில் கட்டி போன்று இனிப்பார் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

பெரும்புலர் காலை மூழ்கி பித்தர்க்குப் பத்தராகி
அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி நல் விளக்கு தூபம் விதியினால் இட வல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே.

விரும்பு ஒப்பான் என்று சிவபெருமான் அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இந்த தொடர் நமக்கு வேண்டுவார்க்கு வேண்டுவது ஈவான் கண்டாய் என்ற தொடரினை நினைவூட்டுகின்றது. இந்த தொடர் மறைக்காடு தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் (6.23) முதல் பாடலில் வருகின்றது. மாண்ட மனத்தார் = மாட்சிமை பொருந்திய மனத்தினை உடையவர்கள், விரதம் இருப்பவர்கள், கோபத்தை அறவே ஒழித்து, கொள்ள வேண்டிய நல்ல பண்புகளைக் கொண்டு ஒழுக வேண்டும் என்பதால் விரதம் இருப்பவர்களின் மனத்தினை பெருமை பொருந்திய மனம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணி கண்டாய்
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் தானே

பொழிப்புரை

தன்னை நினைக்கும் அடியார்களுக்கு கரும்புபோன்று இனிப்பவனும், முறைப்படி வழிபட்டு தியானம் செய்யும் ஞானிகளுக்கு கரும்பு கட்டி போன்று இருப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் அந்தந்த உயிர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயன்களை விளைவிப்பவனும், விண்ணோர்கள் காண முடியாதவனும், அனைத்து உயிர்களுடனும் கலந்து அரும்பு போன்று குவிந்து மறைந்து காணப்படுபவனும், தனக்கு விருப்பமான எட்டு அக மலர்களை வளர்த்துக்கொண்டு தன்னை வழிபடும் அடியார்களின் மனதினில் உள்ள அக மலர்களின் பயனாகிய பக்தி எனப்படும் தேனினைப் பருகுவதற்கு அத்தகைய மனங்களைச் சுற்றித் திரியும் தேன் வண்டாக இருப்பவனும் ஆகிய அரத்துறை இறைவனைக் காணுங்கள். அவனைத்தான் நாம் தொழுகின்றோம்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.