26. அன்னம் பாலிக்கும் - பாடல் 10
என்று வந்தாய் என்று கேட்டு, இறைவன் தன்னுடன் பேசியதற்காக மிகவும் மகிழ்ந்து பெருமிதத்துடன் இருந்த அப்பர் பிரான், அதே
பாடல் 10
நாடி நாரணன் நான்முகன் என்று இவர்
தேடியும் திரிந்தும் காண வல்லரோ
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே

விளக்கம்

என்று வந்தாய் என்று கேட்டு, இறைவன் தன்னுடன் பேசியதற்காக மிகவும் மகிழ்ந்து பெருமிதத்துடன் இருந்த அப்பர் பிரான், அதே பதிகத்தின் மூன்றாவது பாடலில், இறைவன் எந்த சுவடும் இல்லாமல், தனது மனதினில் புகுந்து நின்றமையை குறிப்பிட்டார்.

கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பதென்னே
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றமபலத்து நட்டம்
பொன்மலையில் வெள்ளிக் குன்றது போலப் பொலிந்து இலங்கி
என் மனமே ஒன்றிப் புக்கனன் போந்த சுவடு இல்லையே

அந்த பெருமிதத்திற்கு காரணம், என்ன என்பதை இந்தப் பாடலில் விளக்குகின்றார். நாரணன், நான்முகன் இருவரும் தேடியும் காணாத சிவபிரான் தனது மனதினில் எளிதில் புகுந்தால் எவருக்குத் தான் மகிழ்ச்சி பொங்காது. தனது பெருமிதத்தினை இறுமாப்பு என்றே அங்கமாலைப் பதிகத்தில் (4.09.11 & 12) அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் காணலாம். ஈசனின் திருவடியைச் சென்றடைந்த தான் இறுமாந்து இருப்பதாக பதினோராம் பாடலில் கூறுகின்றார். இறுமாப்பிற்கு என்ன காரணம் என்பது அடுத்த பாடலில் விளக்கப்படுகின்றது. மாலோடு நான்முகனும் தேடிக் காணாத தேவன் தன்னுள்ளே இருப்பதைத் தேடிக் கண்டு கொண்டதால் வந்த இறுமாப்பு என்று விளக்கம் கூறும் அழகினை கீழ்க்கண்ட இரண்டு பாடல்களில் நாம் காணலாம்.

இறுமாந்து இருப்பன் கொலோ ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டு
சிறுமான் ஏந்தி தன் சேவடிக்கீழ் சென்றங்கு இறுமாந்திருப்பன் கொலோ
தேடிக் கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்

பொழிப்புரை

நாரணன், நான்முகன் என்ற இருவரும் தேடியும் திரிந்தும் காண முடியாத இறைவன் சிவபெருமான்; மாட மாளிகைகள் சூழ்ந்த சிற்றம்பலத்தில் ஆடும் பிரானும் மற்றவர்கள் எளிதில் அறியமுடியாத பெருமை படைத்தவனும் ஆகிய சிவபெருமானது திருவடிகள் எனது நெஞ்சத்தில் உள்ளான்.

Advertisement