முகப்பு
தினம் ஒரு தேவாரம்

27. நன்று நாள் தொறும் - பாடல் 2

அனைவர்க்கும் கரும்பு போன்று இனிக்கும் இன்பத்தைத் தூண்டும் கரும்பு வில், அதனைத் தன் மீது மன்மதன் பயன்படுத்திய போது, கரும்பு வில்

Updated On : 6 ஜூன், 2016 at 3:04 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:57 PM

பாடல் - 2

கருப்பு வெம் சிலை காமனைக் காய்ந்தவன்
பொருப்பு வெம் சிலையால் புரம் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களம் கை தொழது
இருப்பனாகில் எனக்கு இடர் இல்லையே

விளக்கம்

வெம் சிலை = கொடிய வில். கருப்பு = கரும்பு. மன்மதனின் கரும்பு வில், மக்களின் இரு பாலர்களுக்கு இடையே ஒருவருக்கொருவர் விருப்பத்தை ஏற்படுத்தவல்லது. இவ்வாறு இன்பம் விளைவிக்கவல்ல வில்லினை, இங்கே அப்பர் பிரான் வெஞ்சிலை, கொடிய சிலை என்று கூறுவதன் காரணம், அந்த கரும்பு வில், மற்றவர்களுக்கு இன்பம் விளைவித்தபோதிலும், மன்மதனது அழிவுக்கு காரணமாக அமைந்த நிலைதான்.

பலவிதமான சூழ்ச்சிகள் மூலம், அப்பர் பிரானை கொலை செய்வதற்கு சமணர்கள் முயற்சி செய்தபோதும், சிறிதும் மனம் கலங்காது எல்லாச் சூழ்நிலைகளிலும் சிவபெருமானை ஏத்துவேன் என்று உறுதிப்பாட்டுடன் வாழ்ந்து வந்த அப்பர் பிரானை, சிவபெருமான் காப்பாற்றியதை நாம் அனைவரும் அறிவோம். கடலில் தள்ளப்பட்டு, திருப்பாதிரிப்புலியூர் அருகே கரையேறிய பின்னர், அப்பர் பிரானின் வாழ்க்கையில் எந்த விதமான இடர்களும் ஏற்படவில்லை என்பதை நாம் அவரது புராணத்திலிருந்து அறிகின்றோம். இந்த நிலையையே இங்கே, பெருமானைக் கை தொழுது இருப்பனாகில் எனக்கு இடர் இல்லையே என்று அவர் பாடுகின்றார். தனது சூலை நோய் தீர்க்கப்பட்ட பின்னர் தான் பாடிய முதல் பதிகத்தில். நாமார்க்கும் குடியல்லோம் என்ற பதிகத்தின் முதல் பாடலில் (6.98.1), இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று அவர் பாடியதற்கு ஏற்ப, அவரது வாழ்வில் துன்பங்கள் ஏதும் வாராதவாறு இறைவன் கருணை புரிந்தது, சைவ சமயத்தின் பொன்னேடுகளில் பாதிக்கப்பட வேண்டிய சரித்திரமாகும். இந்த பதிகம் பாடிய பின்னர் சமணர்கள் பல வகையான சூழ்ச்சிகள் (நஞ்சு ஊட்டுதல், மதயானையைக் கொண்டு இடற முயற்சி செய்தல், கடலில் கல்லுடன் பிணைக்கப்பட்டு தள்ளுதல்) செய்தபோதும், அந்த முயற்சிகளை தனக்கு இழைக்கப்படும் இடர்களாக நினைக்காமல். அவர் எதிர்கொள்கின்றார். சங்கரன் என்றால் இன்பம் அளிப்பவன் என்று பொருள். தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் என்று சிவபெருமானை குறிக்கும் அப்பர் பிரான் சிவபிரானுக்குத் தலைவர் எவரும் இல்லை என்பதையும் நமக்கு உணர்த்துகின்றார்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண் குழை ஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே

பொழிப்புரை

அனைவர்க்கும் கரும்பு போன்று இனிக்கும் இன்பத்தைத் தூண்டும் கரும்பு வில், அதனைத் தன் மீது மன்மதன் பயன்படுத்திய போது, கரும்பு வில் கொடிய வில்லாக மாறுமாறு, மன்மதனை அழித்தவன் சிவபெருமான். அவன் மேரு மலையினை வில்லாக வளைத்து, அந்த வில்லினைக் கொண்டு திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து வென்றவன் ஆவான். அவன் மிகவும் விருப்பத்துடன் உறையும் வேட்களத்தைத் தொழுது இருக்கும் எனக்கு எந்த விதமான இடர்களும் இல்லை.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.