27. நன்று நாள் தொறும் - பாடல் 3
வேட்களத்து உறையும் வேதியனாகிய எமது இறைவன், பசுபதியாக அனைத்து உயிர்களுடனும் கலந்து இருப்பவர்;
பாடல் 3
வேட்களத்து உறை வேதியன் எம் இறை
ஆக்கள் ஏறுவர் ஆனைஞ்சும் ஆடுவர்
பூக்கள் கொண்டு அவன் பொன்னடி போற்றினால்
காப்பர் நம்மை கறை மிடற்று அண்ணலே

விளக்கம்

ஆ = பசு. ஆக்கள் ஏறுவர் = பசுக்களின் உள்ளே இருப்பவர். பசு என்பது உயிரினை குறிக்கும் பசுக்கள் என்று கூறியதால் அனைத்து உயிர்களின் உள்ளே இருந்து கொண்டு அவைகளுக்கு வழிகாட்டியாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப்படுகின்றது. ஆக்கள் என்று பன்மையில் சொல்வதால், பெருமானது வாகனமாகிய எருதினை குறிப்பதாக பொருள் கொள்வது பொருத்தம் அன்று.

பொழிப்புரை

வேட்களத்து உறையும் வேதியனாகிய எமது இறைவன், பசுபதியாக அனைத்து உயிர்களுடனும் கலந்து இருப்பவர்; அவர் பசுவிடமிருந்து கிடைக்கப் பெரும் ஐந்து பொருட்களைக் கொண்டு நீராடுதலை பெரிதும் விரும்புவார்; அத்தகைய இறைவனை, பூக்கள் கொண்டு அவனது திருவடிகளில் சமர்பித்து அவனை வாழ்த்தி வணங்கினால், திருநீலகண்டராக விளங்கும் அவர் நம்மை காப்பார். எனவே நீங்கள் அனைவரும் அவரை வணங்கி வழிபட்டு அருள் பெறுவீர்களாக.

Advertisement