முகப்பு
தினம் ஒரு தேவாரம்

17. மாமாத்தாகிய மாலயன் - பாடல் 11

ஆணவத்துக்குக் கட்டுபடாத சிவபெருமான், அன்புக்கும் பக்திக்கும் கட்டுப்படும் தன்மையை அண்ணாமலை சம்பவத்தின் மூலம், பதிகத்தின்

Updated On : 4 மார்ச், 2016 at 12:28 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:16 PM

பாடல்11

விடலையாய் விலங்கல் எடுத்தான் முடி
அடர ஓர் விரல் ஊன்றிய ஆமாத்தூர்
இடமதாக் கொண்ட ஈசனுக்கு என்னுளம்
இடமதாகக் கொண்டு இன்புற்று இருப்பனே

விளக்கம்

விடலை = மூர்க்கன். விலங்கல் = மலை, கயிலை மலை. அடர = நெரிய.

பொழிப்புரை

எவருக்கும் அடங்காத மூர்க்கனாக இருந்த அரக்கன் இராவணன், தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி, கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்தபோது, அவனது பத்து தலைகளும் நொறுங்குமாறு, கயிலை மலையின் மீது தனது கால் விரலினை ஊன்றியவன் சிவபெருமான். ஆமாத்தூரை இடமாகக் கொண்டுள்ள அந்த இறைவனுக்கு எனது மனதினை இடமாக அளித்து மிகவும் இன்பமாக அடியேன் இருப்பேன்.

முடிவுரை

ஆணவத்துக்குக் கட்டுபடாத சிவபெருமான், அன்புக்கும் பக்திக்கும் கட்டுப்படும் தன்மையை அண்ணாமலை சம்பவத்தின் மூலம், பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்திய அப்பர் பிரான், அடுத்த பாடலில் தன்னை தியானிப்பவர்களின் மனதினில் சிவபெருமான் உறைகின்றார் என்று கூறுகின்றார். மூன்றாவது பாடலிலும் நான்காவது பாடலிலும், ஆறாவது பாடலிலும், தனது அனுபவத்தை, ஆமாத்தூர் அரனே என்று தான் அழைத்தபோது அவன் தனக்கு மிகவும் இனியவனாக இருந்ததையும், அவனை நினைத்தவுடன் அன்னாள் வரை தன்னை வஞ்சனையாக திசை திருப்பிய புலன்களின் வழிகள் வற்றிப்போயின என்றும், இறைவனை தனது ஆழ் மனதினில் நினைத்தவுடன் மனதில் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்த நிலையையும் நமக்கு உணர்த்துகின்றார். ஐந்தாவது பாடலில், இராமபிரான் வழிபட்ட தலபுராணச் செய்தியை நமக்கு அப்பர் பிரான் கூறுகின்றார். ஏழாவது பாடலில் அவனது பெருமையையும் பத்தாவது பாடலில் பகையுடன் இருக்கும் பாம்பினையும் சந்திரனையும் பகை தீர்த்து ஆட்கொண்டு ஒரே இடத்தில் வைத்த அவனது திறமையையும் உணர்த்தும் அப்பர் பிரான், எட்டாவது பாடலில் தனது அடியார்களுக்கு அவர்களது கண்ணின் பாவை போன்று அவர்களுடன் நெருங்கி இருப்பதையும், ஒன்பதாவது பாடலில் சமணர்களுடன் வாழ்ந்து வந்த தன்னை ஆட்கொண்டு, அவர்களிடமிருந்து பிரித்த கருணைச் செயலையும், கடைப் பாடலில் இறைவனுக்கு தனது மனதினில் இடம் கொடுத்து தான் மகிழ்ந்திருப்பேன் என்றும் குறிப்பிடுகின்றார். தனக்கு இறைவன் அருள் புரிந்ததை நினைத்து, பதிகத்தின் பல பாடல்களில் மனம் நெகிழும் அப்பர் பிரான், அந்த மகிழ்ச்சிப் பெருக்கில், இந்த பதிகத்தில் ஒரு பாடல் அதிகமாக கொடுத்து நம்மை மகிழ்விக்கின்றார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.