முகப்பு
தினம் ஒரு தேவாரம்

18. வண்ணங்கள் தாம் பாடி - பாடல் 5

பிச்சை ஏற்று ஊர் ஊராகத் திரிந்ததால் பொருள் ஏதும் இல்லாதவர்போல தோற்றம் அளித்தாலும்,

Updated On : 18 மார்ச், 2016 at 2:33 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:19 PM

பாடல் 5

உருளுடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும்
குறைவில்லை ஊர்தி வெள்ளேறு
இருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர் இமையவர்கள்
தொழுது ஏத்தும் இறைவனார் தாம்
பொருளுடையர் அல்லர் இலரும் அல்லர் புலித்தோல்
உடையாகப் பூதம் சூழ
அருளுடைய அம் கோதை மாலை மார்பர் அழகியரே
ஆமாத்தூர் ஐயனாரே

விளக்கம்

உருள் = சக்கரம். கோதை = மாலையின் ஒரு வகை.

பிச்சை ஏற்று ஊர் ஊராகத் திரிந்ததால் பொருள் ஏதும் இல்லாதவர்போல தோற்றம் அளித்தாலும், உலகம் அனைத்தையும் உடையவர் என்பதால், உண்மையில் பொருள் உடையவர். எல்லாம் உடையவர் சிவபிரான் என்பதை உணர்த்தும் வகையில், நக்கீரர், தனது கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி என்ற பதிகத்தின் ஒரு பாடலில், தான் நாளும் பிச்சை ஏற்றாலும், தனது அடியார்களுக்கு வானுலகமும், மண்ணுலகமும் கொடுப்பவன் சிவபிரான் என்று கூறுகின்றார்.

இருந்தவா காணீர் இது என்ன மாயம்
அருந்தண் கயிலாயத்து அண்ணல் வருந்திப் போய்த்
தான் நாளும் பிச்சை புகும் போலும் தன் அடியார்
வானாள மண்ணாள வைத்து

பொழிப்புரை

சக்கரங்களை உடைய தேர், குதிரை, யானை போன்றவற்றை குறைவறப் பெற்றிருப்பினும் தனது வாகனமாக வெண்மை நிறம் கொண்ட காளையையே, ஈசன் பயன்படுத்துகின்றார். நஞ்சம் உண்டதால் கறுத்த கண்டத்தை உடைய இவர், செந்தீயின் வண்ணத்தவர். வானோர்கள் தொழுதேத்தும் இவர், தான் பலி தேடிப் போனாலும், தனது அடியார்களுக்கு அவர்கள் வேண்டுவன கொடுப்பதால், இவரை பொருள் உள்ளவர் என்றும் சொல்ல முடிவதில்லை, பொருள் அல்லாதவர் என்றும் சொல்ல முடிவதில்லை. புலித்தோலை ஆடையாகக் கொண்டுள்ள இவரை பூதங்கள் சூழ்ந்து இருக்கின்றார்கள். அடியார்களுக்கு அருளும் தன்மை படைத்த ஆமாத்தூர் தலைவர், தனது மார்பினில், கோதை எனப்படும் வகையைச் சார்ந்த மாலையினை அணிந்து மிகவும் அழகியவராக காணப்படுகின்றார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.